Homeசெய்திகள்இந்தியா"அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை"- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

“அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை”- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

-

 

"அமலாக்கத்துறை சம்மன்கள் பொய்யானவை"- முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்டவிரோதமானவை, பொய்யானவை என்று டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டியுள்ளார்.டெல்லி அரசுக் கொண்டு வந்த புதிய மதுபான கொள்கையில் முறைகேடு நடந்ததாகப் புகார் எழுந்தது. முறைகேடுகளால் அரசுக்கு ரூபாய் 2,800 கோடி வரை இழப்பு ஏற்பட்டதாக சி.பி.ஐ., அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. அத்துடன், இது தொடர்பாக, அமலாக்கத்துறையும், சி.பி.ஐ.யும் வழக்குப்பதிவுச் செய்து விசாரணை நடத்தி வருகிறது.

“அதானி குழுமக் குற்றச்சாட்டை செபி அமைப்பே விசாரிக்கும்”- உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் ஆம் ஆத்மி கட்சியின் மூத்த தலைவரும், டெல்லி துணை முதலமைச்சருமான மணீஷ் சிசோடியாவை அமலாக்கத்துறை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. அதேபோல், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங்கும் மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.

இந்த சூழலில், டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நேரில் விசாரணைக்கு ஆஜராக அமலாக்கத்துறை மூன்றாவது சம்மனை அரவிந்த் கெஜ்ரிவால் அனுப்பியிருந்த நிலையில், அதனை வாங்க அவர் மறுத்துவிட்டார். முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்படலாம் என டெல்லி அமைச்சர் அதிஷி நேற்று (ஜன.03) கூறிய நிலையில், முதலமைச்சரின் வீட்டின் முன்பு அதிகளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சூழலில் ஆம் ஆத்மி கட்சியின் தலைவரும், டெல்லி முதலமைச்சருமான அரவிந்த் கெஜ்ரிவால் தான் பேசிய காணொளியை வெளியிட்டுள்ளார். அதில், அமலாக்கத்துறையின் சம்மன்கள் சட்ட விரோதமானவை, பொய்யானவை. ஊழலில் சிக்கியுள்ள பா.ஜ.க.வினரை அமலாக்கத்துறை தொடுவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலில் நான் பிரசாரம் செய்யக் கூடாது என்பதாலேயே கைது செய்ய நினைக்கிறது பா.ஜ.க.

முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டில் காவல்துறை பாதுகாப்பு அதிகரிப்பு!

சி.பி.ஐ., அமலாக்கத்துறை மூலம் தன்னை மிரட்டுகிறது; கைது செய்ய பா.ஜ.க. விரும்புகிறது. நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை; பா.ஜ.க.வில் சேராதவர்களுக்கு பாதுகாப்பு இல்லை” என்று குற்றம் சாட்டியுள்ளார்.

MUST READ