Homeசெய்திகள்இந்தியாபிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்

பிரச்சாரத்திற்கு செல்ல தயங்கும் மோடி! உளவுத்துறை ஷாக் ரிப்போர்ட்

-

 

'6-வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்த பிரதமர் நரேந்திர மோடி!'

மக்களவை தேர்தல் தமிழ்நாடு, புதுவை உள்பட நாடு முழுவதும் 102 தொகுதிகளுக்கு முதல் கட்டத் தேர்தல் ஏப்ரல் 19- ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் – குற்றவாளிகள் குறித்து தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் சன்மானம்!

ஆனால் பிரதமர் மோடி கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு எங்கும் செல்லவில்லை. அவர் பிரச்சாரத்திற்கு செல்லாதது விவாதப் பொருளாக மாறியுள்ளது. மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடிக்கும் பெரும் முயற்சியால் உள்ள பிரதமர் மோடி, கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு செல்லாதது ஏன்?என்ற கேள்விக்கு அதன் பின்னணியில் உளவுத்துறை ரிப்போர்ட் இருக்கிறது என்கிறது அரசியல் வட்டாரம்.

மக்களவை தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா ஆகிய 6 மாநிலங்களில் எடுக்கப்பட்ட சர்வேயில் பா.ஜ.க. பெரும் பின்னடைவை சந்திக்கும் என உளவுத்துறை தெரிவித்திருந்தது. அதேநேரத்தில் உத்தரபிரதேசம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம், குஜராத் ஆகிய வடமாநிலங்களில் வெற்றி வாய்ப்பு பா.ஜ.க.விற்கு சாதகமாக இருக்கிறது என்று உளவுத்துறை சொன்னதை வைத்து மோடி டீம் உற்சாகத்தில் இருந்தது.

இந்த நிலையில் உச்சநீதிமன்றம் கொடுத்த தேர்தல் பத்திர தீர்ப்பு பாஜகவிற்கு பெரும் இடியாய் விழுந்தது. நீதிமன்றம் தீர்ப்பு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் வாங்கியதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என எஸ்பிஐக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட, அதில் பெரும்பாலான பணம் பா.ஜ.க.வுக்கு சென்றது வெட்ட வெளிச்சமானது.

மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கச்சத்தீவு விவகாரம்!

இதனால் ஊழல் குறித்த பிரச்சாரத்தை முன்னெடுக்க முடியாமல் அப்படியே கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டார் பிரதமர் மோடி. கடந்த 10 ஆண்டுகளில் மோடி செய்த சாதனை குறித்தும் பேச முடியவில்லை. ஊழலைப் பற்றியும் பேச முடியவில்லை.

வட மாநிலங்களில் வேலையில்லா திண்டாட்டம், சிலிண்டர் விலை உயர்வு, பெட்ரோல் டீசல் விலை சமானிய மக்களை கடுமையாக பாதித்திருப்பதால் அவர்கள் பாஜக அரசு மீதும், பிரதமர் மோடி மீதும் கடும் கோபத்தில் இருக்கிறார்கள் என்பதை உளவுத்துறை ஏற்கனவே தெரிவித்துவிட்டது.

தேர்தல் தேதி அறிவித்த பின்னர் உளவுத்துறை லேட்டஸ்டாக கொடுத்த ரிப்போர்டிலும் வெற்றி வாய்ப்பு இருப்பதாக கொடுத்த தொகுதிகளில் பெரும்பாலானவை வெற்றி வாய்ப்பு குறைவு என்று அந்த ரிப்போர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

இதனால் பிரதமர் மோடி மற்றும் பா.ஜ.க. மேலிட தலைவர்கள் பதற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதனால் தான் கடந்த 6 நாட்களாக தேர்தல் பிரச்சாரத்துக்கு எங்கேயும் மோடி செல்லவில்லை என்கிறார்கள். மேலும் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த நிர்மலா சீதாராமன், ஜெய்சங்கர் உள்ளிட்ட மூத்த தலைவர்களே தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியது கள எதார்த்ததை உணர்த்திவிட்டதாம். முக்கிய தலைவர்கள் பலர் இந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தயக்கம் காட்டியதால் புதுமுகங்களுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டிய கட்டாயத்துக்கு பா.ஜ.க. மேலிடம் தள்ளப்பட்டிருக்கிறது. குஜராத், மேற்குவங்கம், டில்லி போன்ற மாநிலங்களில் பாஜக சீட் கொடுத்தும் சிலர் களத்தில் நிற்க தயக்கம் காட்டி போட்டியில் இருந்து ஒதுங்கி கொண்டனர்.

டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோர் கைது, வருமாவரித்துறை, அமலாக்கத்துறை ஆகியவற்றின் ஒருதலைப்பட்சமான நடவடிக்கைகள் வடமாநில மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் மோடிக்கு உளவுத்துறை சொல்லிவிட்டதாம்.

இந்த நிலையில் எப்படியாவது காங்கிரஸ், ஆம் ஆத்மி கட்சி போன்ற எதிர்க்கட்சிகளை மிரட்டி,முடக்கி இந்த தேர்தலில் வெற்றி பெற்றாக வேண்டும் என நினைக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அனைத்து அஸ்திரங்களையும் கையில் எடுக்க தயாராகி வருகிறார் என்று கூறப்படுகிறது.

ஆனால், வடமாநிலங்களில் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்டிரிய ஜனதா தளம் ஆகிய கட்சிகளுக்கு கூட்டம் கூடுவதும் பாஜகவுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இல்லத்திற்கே சென்று அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது!

400 தொகுதிகளை கைப்பற்றுவோம் என்று கனவு கண்டுக்கொண்டிருந்த பா.ஜ.க. தலைவர்கள் அப்படியே கப்சிப் மோடுக்கு சென்றுவிட்டனர். இப்போதைக்கு தென்மாநிலங்கள் கை கொடுக்காது என்ற எதார்த்தத்தை புரிந்துக் கொண்ட பா.ஜ.க.வினர் வட மாநிலங்களில் எப்படி வெற்றி பெறுவது என்பதற்கான புதிய வியூகங்களை வகுக்க தொடங்கி விட்டதாக கூறப்படுகிறது.

தேர்தல் பத்திரம் வழக்கு அம்பலமாகி போனதை தொடர்ந்து பா.ஜ.க.விற்கு தொடர்ந்து பின்னடைவு தான். அதனால் உச்சகட்ட பதட்டத்தில் இருக்கும் பா.ஜ.க., என்ன செய்வது என தெரியாமல்? என்ன தேர்தல் வாக்குறுதி கொடுக்கலாம்? என்பது புரியாமல் குழப்பத்தில் இருக்கிறது.

MUST READ