Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்

கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்

-

கேரளாவில் யானைகளுக்கு ஓட்டப்பந்தயம்

குருவாயூர் கோயில் திருவிழாவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்கும் யானையை தேர்வு செய்வதற்காக நடந்த ஓட்டபந்தயத்தை காண ஏராளமானோர் திரண்டனர்.

10 நாட்கள் நடைபெற உள்ள குருவாயூர் கோயில் திருவிழா

திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குருவாயூர் கோயில் திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் திருவிழா நடைபெறும் நிலையில், பூஜைகளில் பங்கேற்கும் யானையை தேர்வு செய்ய யானை ஓட்டபந்தயம் நடைபெற்றது.

5 யானைகளுக்கு இடையே நடந்த ஓட்டப் பந்தயம்
தேவசம் போர்டுக்கு சொந்தமான 19 யானைகளில் 5 யானைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு பந்தயம் நடத்தப்பட்டது. கோயிலின் கிழக்கு நடை அமைந்துள்ள ஆலமரத்தின் கீழ் இருந்து 5 யானைகளும் இடையே போட்டி நடந்தது.
கோகுல் என்ற யானை முதலிடம் பிடித்தது

இதில், கோகுல் என்ற யானை முதலிடம் பிடித்தது. இந்த யானை கோயில் திருவிழாவில் நடைபெறும் பூஜையில் பங்கேற்ற உள்ளது. யானைகள் ஓட்டபந்தயத்தில் கலந்து கொண்டதை பக்தர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்.

MUST READ