spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஅமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன?- விரிவாகப் பார்ப்போம்!

அமலாக்கத்துறையின் அதிகாரங்கள் என்ன?- விரிவாகப் பார்ப்போம்!

-

- Advertisement -

 

சோதனையை அதிகரித்த அமலாக்கத்துறை..... முடக்கப்படும் சொத்துகள் என்னவாகும்?
File Photo

தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வரும் நிலையில், அந்த அமைப்பின் அதிகாரங்கள் என்ன? என்பது குறித்து விரிவாகப் பார்ப்போம்.

we-r-hiring

அமலாக்கத்துறை மலிவான அரசியல் நடவடிக்கைக்கு முத்தரசன் கண்டனம்

இந்தியாவில் பொருளாதார கட்டங்களைக் கண்காணிக்கவும், பொருளாதாரக் குற்றங்களுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கவும் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது. கடந்த 1956- ஆம் ஆண்டு இந்தியாவில் அமலாக்கத்துறை உருவாக்கப்பட்டது.

அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் 1999, சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டம் 2002 ஆகிய நிதிச் சட்டங்களின் விதிகளை செயல்படுத்த அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இது தவிர, தப்பியோடிய பொருளாதார குற்றவாளிகள் சட்டம் 2018- ன் விதிகளையும், அந்நியச் செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தலைத் தடுப்பது போன்ற சட்டங்களின் விதிகளையும் செயல்படுத்த அமலாக்கத்துறைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

கட்டடம், இடம், வாகனம், கப்பல், விமானம் என எந்த இடத்திற்குள்ளும் நுழைந்து சோதனை செய்யும் அதிகாரம் அமலாக்கத்துறைக்கு உள்ளது. கதவு, பெட்டி, லாக்கர், அலமாரி என எதையும் சாவி இல்லாமல் உடைத்து ஆராய்வதற்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. சோதனையின் போது ஆவணங்களோ, சொத்துக்களோ சிக்கினால் அவற்றை முடக்குவதற்கு முழு அதிகாரம் உள்ளது.

எந்தவொரு சொத்துக்களை ஆராயவோ, அது குறித்து விசாரணை நடத்தவோ அமலாக்கத்துறையால் முடியும். சட்டவிரோத பணப்பரிவர்த்தனை தடுப்புச் சட்டத்தின் கீழ் எந்தவொரு நபரையும் விசாரணைக்கு அழைக்க சம்மன் அனுப்பவும், கைது செய்யவும் அதிகாரம் உள்ளது. பணமோசடி வழக்கில் சிக்கி இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களின் வழக்குகளை அமலாக்கத்துறை விசாரிக்கும்.

நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

இதற்காக, இண்டர்போல் மூலம் வெளிநாடுகளில் பதுங்கி இருப்பவர்களை கைது செய்வதற்கும் அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உள்ளது.

MUST READ