
முற்றிலும் எத்தனாலில் ஓடும் வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுக
மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய மத்திய சாலைப் போக்குவரத்துத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அண்மையில் பென்ஸ் நிறுவனத்தின் தலைவரைச் சந்தித்த போது, இனி மின்சார வாகனங்களை மட்டுமே தயாரிக்கப் போவதாக அவர் தெரிவித்ததாகக் கூறினார்.
முற்றிலும் எத்தனாலில் ஓடக் கூடிய வாகனங்களையும் தயாரிக்கப் போவதாக, வாகனங்களைத் தயாரிக்கும் நிறுவனங்கள் உறுதியளித்துள்ளதாகக் கூறிய மத்திய அமைச்சர், பஜாஜ், டிவிஎஸ் மற்றும் ஹீரோ ஸ்கூட்டர்ஸ் நிறுவனங்கள், 100% எத்தனாலில் ஓடும் வாகனங்களைத் தயாரிக்க ஒப்புக்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக கூட்டணியில் சேரும்- ஜெயக்குமார்
வரும் ஆகஸ்ட் மாதத்தில் டொயோட்டோ நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ள கார், முற்றிலும் எத்தனாலில் ஓடக் கூடியது. பெட்ரோல் விலை ஒரு லிட்டர் சுமார் 100 ரூபாயாக உள்ள நிலையில், எத்தனால் 60 ரூபாய் என்பதோடு, 40% மின்சாரத்தையும் அது வாகனங்களுக்கு உற்பத்திச் செய்துக் கொடுக்கும் எனக் கூறியுள்ளார்.


