உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் அதிமுக
உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள் பட்டியலில், அதிமுக 7-ம் இடம் பிடித்துள்ளது.
இதுகுறித்து எஸ்பி வேலுமணி தனது ட்விட்டர் பக்கத்தில், “World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, “உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்” பட்டியலில், “அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ” ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
World updates தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள, "உலகிலேயே அதிக உறுப்பினர்கள் கொண்ட அரசியல் கட்சிகள்" பட்டியலில், "அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் " ஏழாம் இடம் பிடித்திருப்பது பெருமகிழ்ச்சி அளிக்கிறது.
புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு,… https://t.co/wV1y0HP6l9
— SP Velumani (@SPVelumanicbe) June 26, 2023

புரட்சித் தலைவர் #எம்ஜிஆர் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டு, புரட்சித் தலைவி #அம்மா அவர்களால் கட்டிக்காக்கப்பட்டு, மாபெரும் எஃகு கோட்டையாக உருவாக்கப்பட்ட #அனைத்திந்திய_அண்ணா_திராவிட_முன்னேற்ற_கழகம்,
மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், கழக பொதுச்செயலாளர் அண்ணன் திரு. #எடப்பாடியார் அவர்கள் தலைமையில் வீறுநடை போட்டு வெற்றிக் கொடியை நாட்டி வருகிறது.

கழகம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே, மக்கள் நலன் சார்ந்து மக்களுக்காகவே முழுமையான அர்ப்பணிப்புடன் இயங்கக் கூடிய இயக்கம் #அஇஅதிமுக என்பதற்கு இது மேலும் ஒரு சாட்சி!” எனக் குறிப்பிட்டுள்ளார்.