Homeசெய்திகள்இந்தியாகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார்

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார்

-

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மீண்டும் எம்பியானார்

மக்களவை உறுப்பினர் பதவியை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி திரும்ப பெற்றார்.

2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலின் போது கர்நாடகா மாநிலம் கோலாரில் “மோடி” சமுதாயத்தை இழிவுபடுத்தியதாக ராகுல்காந்தி மீது பர்னேஷ் மோடி அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார். பர்னேஷ் மோடி தொடர்ந்த அவதூறு வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் வயநாடு மக்களவை உறுப்பினர் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. இந்த தண்டனையை ரத்து செய்யக்கோரி ராகுல்காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், ராகுல்காந்தி மீதான தீர்ப்புக்கு இடைக்கால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்ததை அடுத்து ராகுல்காந்திக்கு மீண்டும் எம்பி பதவி வழங்கப்பட்டது. அதிகபட்ச தண்டனை வழங்கியதால் ராகுலுக்கும் வயநாடு தொகுதி மக்களுக்கும் பாதிப்பு என உச்சநீதிமன்றம் கூறியிருந்தது. தண்டனைக்குப் பின் உடனே தகுதிநீக்கம் செய்த சூஅலில் அதனை ரத்து செய்ய தாமதம் ஏன் என கேள்வி எழுந்தது. உச்சநீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, ராகுல்காந்தியின் தகுதிநீக்கத்தை ரத்து செய்து அறிக்கை வெளியிட்டது மக்களவை செயலகம். இதையடுத்து நாளை தொடங்கவுள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தில், காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல்காந்தி பங்கேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

மார்ச் 24 ராகுலின் பதவி பறிக்கப்பட்ட நிலையில், 4 மாதங்களுக்கு பின் தகுதிநீக்கம் திரும்பப்பெறப்பட்டது குறிப்பிடதக்கது.

MUST READ