Homeசெய்திகள்இந்தியாகிளைடர் விமான விபத்து - இருவர் படுகாயம்

கிளைடர் விமான விபத்து – இருவர் படுகாயம்

-

கிளைடர் விமான விபத்து – இருவர் படுகாயம்
ஜார்கண்டில் கிளைடர் விமானம் வீடு மீது மோதி விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி பார்ப்போரை பதற வைத்துள்ளது.
கிளைடர்

ஜார்க்கண்ட் மாநிலம் தன்பாத் மாவட்டத்தில் பர்வாடா விமான தளத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களிலேயே கிளைடர் விமானம் 500 மீட்டர் தொலைவில் உள்ள வீட்டின் மீது மோதியது. அவசர கால எச்சரிக்கை வருவதை விமானி உணர்ந்த அடுத்த வினாடியே கிளைடர் விமானம் வீட்டின் மீது மோதி விபத்துக்குள்ளான காட்சி வெளியாகிய நெஞ்சை உலக்க வைத்துள்ளது.

கிளைடர் விமான விபத்தில் விமானி மற்றும் 14 வயது பயணி ஆகியோர் படுகாயம் அடைந்த நிலையில் வீட்டின் மாடியில் விளையாடிக் கொண்டிருந்த இரண்டு குழந்தைகள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.

இந்த விபத்து தொழில்நுட்ப கோளாறால் நடந்து இருக்கலாம் என்று கூறிய விசாரணைக்குப் பின்னரே காரணம் தெரியவரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

MUST READ