- Advertisement -
அரியானாவில் நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. திடீரென காங்கிரஸ் 37 இடங்களில் முன்னிலை பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறது.
பாஜக 46 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
காலை முதல் முன்னிலை வகித்து வந்த காங்கிரஸ் தற்போது பின்னடைவை சந்தித்துள்ள நிலையில் பாஜக முன்னிலையை சந்தித்து உள்ளது. அங்கே தேர்தல் முடிவுகள் மாறி மாறி வருகின்றன.
அரியானாவில் இருக்கும் 90 தொகுதிகளுக்கு கடந்த அக்டோபர் 5ம் தேதி ஒரே கட்டமாக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. அங்கே மெஜாரிட்டி பெற 45 இடங்கள் தேவை.