spot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு - ரிசர்வ் வங்கி

இணைய வழி பண மோசடிகள் அதிகரிப்பு – ரிசர்வ் வங்கி

-

- Advertisement -

இணையவழி பண பரிவர்த்தனை தொடர்பான மோசடிகள் முந்தைய ஆண்டுகளை காட்டிலும் இந்த ஆண்டு அதிகரித்திருப்பதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

we-r-hiring

2022 – 2023 ஆம் நிதி ஆண்டு செப்டம்பர் மாதம் வரையில் வழக்கு பதிவு செய்யப்பட்ட வங்கி பரிவர்த்தனை மோசடிகள் பண மோசடிகள் குறித்த விவரங்களை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி பொதுத்துறை வங்கிகளில் 2020 – 2021 ஆம் நிதியாண்டில் 59.4 சதவிகிதமாக இருந்த பண பரிவர்த்தனை மோசடி வழக்குகள் 2021 – 2022 நிதியாண்டில் 66.7 சதவிகிதமாக உயர்ந்தது என குறிப்பிட்டுள்ளது ரிசர்வ் வங்கி நடப்பு நிதி ஆண்டில் இது மேலும் அதிகரித்துள்ளதாக கூறியுள்ளது.

பண அட்டைகள் மற்றும் இணைய வழி பண பரிவர்த்தனை மோசடி தொடர்பாக 2020 – 2021 ஆம் நிதி ஆண்டில் 15,998 கோடி ரூபாய் மதிப்பிற்கு 5191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். 2021 – 2022 ஆம் நிதியாண்டில் 6,447 கோடி ரூபாய் மதிப்பிற்கு 6379 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளனர் என்றும் 2022- 2023 ஆம் நிதி ஆண்டில் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் 305 கோடி ரூபாய் மதிப்பிற்கு 1915 வழக்குகள் பதிவாகியுள்ளன என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது .

MUST READ