
முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுக்கு இடைக்கால பிணை வழங்கி ஆந்திரா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கேரளா குண்டு வெடிப்பு எதிரொலி-போலீசார் தீவீர சோதனை
ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு, திறன் மேம்பாட்டுக் கழக வழக்கில் ஆந்திர மாநில சிஐடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு, ராஜமுந்திரி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், தனக்கும், தனது குடும்பத்திற்கும் ஆளும் கட்சியால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக நீதிபதிக்கு சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதியிருந்தார்.
இந்த சூழலில், சந்திரபாபு நாயுடு சார்பில் ஆந்திரா மாநில உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணை இன்று (அக்.31) நடைபெற்றது. அப்போது, சந்திரபாபு நாயுடு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், சந்திரபாபு நாயுடுவுக்கு உடல்நிலை சரியில்லாதக் காரணத்தால், பிணை வழங்குமாறு கோரினார்.
இதனை ஏற்றுக் கொண்ட ஆந்திரா உயர்நீதிமன்றம், உடல்நலக்குறைவைக் கருத்தில் கொண்டு நான்கு வாரங்களுக்கு சந்திரபாபு நாயுடுவுக்கு பிணை வழங்கி உத்தரவிட்டுள்ளார்.
ஸ்ரீ கடும்பாடி சின்ன அம்மன் கோவில் கும்பாபிஷேகம் குறித்து ஆலோசனைக் கூட்டம்
உயர்நீதிமன்றத் தீர்ப்பை அடுத்து, கடந்த 52 நாட்களாக ராஜமுந்திரி சிறையில் உள்ள சந்திரபாபு நாயுடு, இன்று (அக்.31) மாலைக்குள் பிணையில் இருந்து வெளியே வருகிறார். அதைத் தொடர்ந்து, தொண்டர்களை சந்திக்க அவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.