“ஜெய் சந்திரபாபு நாயுடு ஜெய் சந்திரபாபு அண்ணகாரு” என முழக்கம் எழுப்பி ஆரவாரம் செய்த ஆதரவாளர்கள்.
ஆந்திராவின் 18 ஆவது முதல்வராக பொறுப்பேற்ற தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. விஜயவாடா கேசரபல்லி பள்ளி ஐ.டி பார்க்கில் நடந்த பதவியேற்பு விழா நடைபெற்றது.
பிரதமர் நரேந்திர மோடி, அவரது அமைச்சரவை சகாக்கள் அமித் ஷா, நிதின் கட்கரி, ஜே.பி.நட்டா மற்றும் பல தலைவர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொண்டனர்.
முன்னாள் துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு, முன்னாள் தலைமை நீதிபதி என்.வி.ரமணா, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சிரஞ்சீவி உள்ளிட்டோரும் விழாவில் கலந்து கொண்டனர் .ஆந்திர கவர்னர் அப்துல் நசீர், முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
பிரதமர் மோடி தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவிற்கு மலர்கொத்து தந்து கட்டித்தழுவி வாழ்த்தினார் . சந்திரபாபு நாயுடு வேணும் நான் என்று அவர் பிரதமர் ஆன உறுதி மொழியை சொன்ன போது “ஜெய் சந்திரபாபு நாயுடு ஜெய் சந்திரபாபு அண்ணகாரு “என அவரது ஆதரவாளர்கள் முழக்கங்களை எழுப்பி ஆரவாரம் செய்தனர்.