spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா"ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்"- இஸ்ரோ அறிவிப்பு!

“ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்”- இஸ்ரோ அறிவிப்பு!

-

- Advertisement -

 

"ஜூலை 30- ஆம் தேதி பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும்"- இஸ்ரோ அறிவிப்பு!
Photo: ISRO

வரும் ஜூலை 30- ஆம் தேதி அன்று காலை 06.30 மணிக்கு ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் ராக்கெட் ஏவுதளத்தில் இருந்து சிங்கப்பூரின் DS-SAR மற்றும் சிங்கப்பூரின் நிறுவனங்கள் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் மற்றும் நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள் உருவாக்கிய ஆறு சிறிய செயற்கைக்கோள்கள் என மொத்தம் ஏழு செயற்கைக்கோள்களுடன் பிஎஸ்எல்வி- சி56 (PSLV-C56) ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ தெரிவித்துள்ளது.

we-r-hiring

விபத்தில் உயிரிழக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்வு

352 கிலோ எடைக்கொண்ட டிஎஸ்-சார் எனும் செயற்கைக்கோள் புவிக் கண்காணிப்புக்கு பயன்படுத்தப்படவுள்ளது. அதேபோல், Velox-AM, Arcade, SCOOB-II, NuLIoN, Galassia-2, ORB-12 Strider ஆகிய ஆறு செயற்கைக்கோள்களும் பிஎஸ்எல்வி- சி56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்படவுள்ளது. இது வர்த்தக ரீதியாக செலுத்தப்படும் ராக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை வருகிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு!

கடந்த ஜூலை 14- ஆம் தேதி அன்று சந்திரயான் – 3 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டுள்ள நிலையில், ஜூலை 30- ஆம் தேதி அன்று பிஎஸ்எல்வி- சி56 விண்ணில் செலுத்தப்படவுள்ளது. ஒரே மாதத்தில் இரண்டு ராக்கெட்டுகள் விண்ணில் ஏவப்படவுள்ளது இதுவே முதல் முறை.

MUST READ