Homeசெய்திகள்இந்தியா20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்றவர்களை தூக்கில் இடுக- அரவிந்த் கெஜ்ரிவால்

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்றவர்களை தூக்கில் இடுக- அரவிந்த் கெஜ்ரிவால்

-

- Advertisement -

20 வயது பெண்ணை 12 கி.மீ காரில் இழுத்து சென்ற 5 குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

arvind kejriwal

we-r-hiring

டெல்லி காஞ்சவாலா பகுதியில் பலினோ காருக்கு அடியில் 20 வயது பெண் ஒருவர் சுமார் 12 கிலோமீட்டர் தூரம் இழுத்து செல்லப்பட்டது. டெல்லியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரில் பயணம் செய்த 5 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், உயிரிழந்த பெண்ணின் குடும்பத்தார் உயிரிழந்த பெண் கற்பழிக்கப்பட்டு இருக்கலாம் ஆனால் போலீசார் குற்றவாளிகளிடம் பணத்தை பெற்றுக்கொண்டு வழக்கை மூடி மறைக்கிறார்கள் என குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், இதுபோன்ற வழக்கில் உயிரிழந்த பெண்ணுக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும், கைது செய்யப்பட்டுள்ள 5 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என கூறியுள்ளார். மேலும், இந்த சம்பவம் வெட்கக்கேடானது என டுவிட்டரில் பதிவிட்டுள்ள கெஜ்ரிவால், குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனையாக தூக்கு தண்டனை விதிக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.

MUST READ