Homeசெய்திகள்இந்தியாகர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!

கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!

-

- Advertisement -

 

கர்நாடக தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை!
Photo: Karnataka INC

இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

கிழக்கு மாகாண ஆளுநராகப் பொறுப்பேற்றுக் கொண்ட செந்தில் தொண்டமான்!

அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் மற்றும் அமைச்சரவையும் பதவியேற்றுக் கொண்டது.

இந்த நிலையில், நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

விவசாயக் கடன் ரூபாய் 3 லட்சத்தில் இருந்து ரூபாய் 10 லட்சமாக உயர்த்தப்படும். தினமும் பகல் நேரங்களில் விவசாயிகளுக்கு 8 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும் என்பன போன்ற அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. ஆழ்கடலில் மீன் பிடிப்பவர்களுக்கு ஆண்டுக்கு 500 லிட்டர் வரியில்லாத டீசல் வழங்கப்படும் என்றும், மீன் பிடித் தடைக்காலத்தில் 6,000 ரூபாய் வழங்கப்படும் என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

குவாட் நாடுகளின் கூட்டம் ரத்து- காரணம் என்ன தெரியுமா?

அதேபோல், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூபாய் 2,000 வழங்கப்படும் என்றும், அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம், 200 யூனிட் மின்சாரம் இலவசம், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் 10 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்பன உள்ளிட்ட அறிவிப்புகளும் வெளியிடப்பட்டன.

டிப்ளமோ முடித்து வேலை இல்லாதவர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூபாய் 1,500 வழங்கப்படும். வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதம் ரூபாய் 3,000 வழங்கப்படும் உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ளன.

MUST READ