
இன்று (மே 20) மதியம் 12.30 மணியளவில் கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள கண்டீரவா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநிலத்தின் முதலமைச்சராக இரண்டாவது முறையாக சித்தராமையா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவிப் பிரமாணத்தையும், ரகசிய காப்பு பிரமாணத்தையும் செய்து வைத்தார்.

‘மாமன்னன்’ முதல் சிங்கிள்: வடிவேலுவின் குரலில்
அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமார் பதவியேற்றுக் கொண்டார். அதன் தொடர்ச்சியாக, கொரட்டகரே தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஜி.பரமேஸ்வரா, தேவனஹள்ளி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் முனியப்பா, சர்வஞானகர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் கே.ஜெ.ஜார்ஜ், பாபலேஷ்வர் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் பாட்டீல், யெம்கன்மார்டி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் ஜர்கிஹோலி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே, சாம்ராஜ்பேட் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஷமீர் அகமதுகான், சட்டமன்ற உறுப்பினர் ராமலிங்க ரெட்டி ஆகிய 8 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றுக் கொண்டனர்.
விஜய் சேதுபதியின் ‘VJS51’ பூஜையுடன் தொடக்கம்
பதவியேற்பு விழாவில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி, பொதுச்செயலளர் பிரியங்கா காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால், காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, ஜம்மு- காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லா, முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி, பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.