spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசூடுபிடிக்கும் பாலியல் வழக்கு....கைதாகிறாரா எடியூரப்பா?

சூடுபிடிக்கும் பாலியல் வழக்கு….கைதாகிறாரா எடியூரப்பா?

-

- Advertisement -

எடியூரப்பா மீது பாய்ந்தது போக்சோ வழக்கு!

பாஜக மூத்த தலைவரும், கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சருமான எடியூரப்பா பாலியல் வழக்கில் கைது செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

we-r-hiring

கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சராக இருந்தவர் எடியூரப்பா. இவர் மீது கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு சிறுமியின் தாய் பாலியல் புகார் அளித்தார். அந்த புகாரில் வேலை தொடர்பாக எடியூரப்பாவை அனுகிய போது அவர் தனது 17 வயது மகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக தெரிவித்து இருந்தார். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், இந்த புகார் தொடர்பாக எடியூரப்பா திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்தார். தேர்தல் நேரம் என்பதால் திட்டமிட்டு தன் மீது வீண் பழி சுமத்தப்படுவதாக அவர் குற்றம்சாட்டினார். இந்த வழக்கை கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டது. இதனிடையே அந்த சிறுமியின் தாய் திடீரென உயிரிழந்தார். நுரையீரல் புற்றுநோய் காரணமாக அவரது தாய் உயிரிழந்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில், எடியூரப்பாவை கைது செய்ய கோரி சிறுமியின் பெற்றோர் அம்மாநில உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இதனையடுத்து இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமடி சிறப்பு புலனாய்வு குழு எடியூரப்பாவுக்கு சம்மன் அனுப்பியது. ஆனால் எடியூரப்பாக இந்த வழக்கு தொடர்பாக ஆஜராகவில்லை. இதன் காரணமாக எடியூரப்பா கைது செய்யப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனிடையே இந்த வழக்கு பொய்யானவை என்றும், இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரியும் எடியூரப்பா கர்நாடக உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

MUST READ