spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாடெல்லியில் ஆட்சியை இழந்த கெஜ்ரிவால் - பஞ்சாப் அரசை தக்கவைக்க ஆலோசனை

டெல்லியில் ஆட்சியை இழந்த கெஜ்ரிவால் – பஞ்சாப் அரசை தக்கவைக்க ஆலோசனை

-

- Advertisement -

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் உள்ளிட்ட மாநில அமைச்சர்கள் மற்றும்  எம்எல்ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சி  ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆலோசனை.

டெல்லியில் ஆட்சியை இழந்த கெஜ்ரிவால் - பஞ்சாப் அரசை தக்கவைக்க ஆலோசனைநடந்து முடிந்த டெல்லி சட்டமன்றத் தேர்தலில் ஆம் ஆத்மி தோல்வியடைந்த  நிலையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. கூட்டத்தின் போது டெல்லி சட்டமன்ற தேர்தல் தோல்விக்கான காரணம்கள் மற்றும் 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள பஞ்சாப் சட்டமன்றத் தேர்தலுக்கான உக்திகளைத்  குறித்தும் விவாதிக்கப்படுகிறது.

we-r-hiring

டெல்லி சட்ட பேரவைக்கு நடந்த தேர்தலில் 70 தொகுதிகளில் பாஜக 48 இடங்களை வென்றது, அதே நேரத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களை மட்டுமே பெற்றுள்ளது. தேர்தல் பிரச்சாரத்தில் பஞ்சாப் முதல்வர் உள்ளிட்ட  சட்டமன்ற உறுப்பினர்கள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட நிலையிலும் ஆம் ஆத்மி கட்சி தோல்வியை கண்ட நிலையில் இக்கூட்டத் நடைபெறுகிறது.

டெல்லியில் உள்ள பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானுக்கு சொந்தமான இல்லத்தில் கூட்டம் நடக்கிறது. 2027ல் நடைபெறும் பஞ்சாப் சட்டமன்ற தேர்தலுக்கு கட்சியை வெளிப்படுத்த அரவிந்த் கெஜ்ரிவால் உறுப்பினர்களுக்கு அறிவுறுத்தல்.

பஞ்சாபில் கடந்த 2022 சட்டமன்றத் தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி 117 இடங்களில் 92 இடங்களைப் பிடித்து மகத்தான வெற்றியைப் பெற்றது. இருப்பினும் தற்போது பஞ்சாப் ஆம் ஆத்மி தலைமை மீது கட்சிக்குள் கருத்து வேறுபாடுகள் நிலவுவதால் கட்சியை ஒருங்கிணைந்து செயல்பட வலியுறுத்தினார் அர்விந்த் கேஜ்ரிவால்.

பஞ்சாப் லூதியானா சட்டமன்றத் தொகுதி தற்போது காலியாக இருப்பதால், கெஜ்ரிவால் அங்கிருந்து போட்டியிட்டு பஞ்சாப் அரசாங்கத்தில் அங்கம் வகிப்பது குறித்தும் விவாதங்கள் நடந்து வருகின்றன. தற்போது ஆம் ஆத்மி ஆளும் ஒரே மாநிலம் பஞ்சாப் என்பதால் இன்றைய கூட்டம் முக்கியத்துவம் வந்ததாக பார்க்கப்படுகிறது. அரவிந்த் கெஜ்ரிவால் உடனான சந்திப்பு நேர்மையான முறையில் நடைபெறும்.

அரவிந்த் கெஜ்ரிவால் ஒரு போராளி. ஆம் ஆத்மி கட்சி மேலும் வலுப்பெற்று மக்களுக்காக சிறந்த முறையில் பாடுபடும். பஞ்சாப் அரசு மிகச் சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு சேவை செய்து வருகிறது.

பஞ்சாப் சட்டமன்ற சபாநாயகர் குல்தார் சிங் சந்த்வான்.  கூட்டத்தின் நிகழ்ச்சி நிரல் சந்திப்பின்போது தான் தெரியும். அவ்வப்போது அரவிந்த் கெஜ்ரிவால் உடனான ஆலோசனை கூட்டம் நடைபெறுவது வழக்கம். மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல் காரணமாக  அனைவரும் நீண்ட காலமாக தேர்தல் பணியில் ஈடுபட்டோம்.

MUST READ