Homeசெய்திகள்இந்தியாகேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!

-

 

கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது!
File Photo

சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் இன்று (ஜூன் 08) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் தொடங்கியுள்ளது. மேலும் இது தென் தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.

“தலைநிமிர்ந்துக் கம்பீரமாக நிற்கிறது தமிழகம்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

ஜூன் 07- ஆம் தேதி காலை 08.30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய தீவிர புயல் ‘பிப்பர்ஜாய்’ ஜூன் 07- ஆம் தேதி காலை 11.30 மணியளவில் மிக தீவிர புயலாக வலுப்பெற்று, வடக்கு திசையில் நகர்ந்து இன்று (ஜூன் 08) காலை 08.30 மணியளவில் மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் கோவாவில் இருந்து மேற்கு- தென் மேற்கே சுமார் 850 கிலோ மீட்டர் தொலைவில், மும்பையில் இருந்து தென் மேற்கே சுமார் 900 கிலோ மீட்டர் தொலைவில் நிலைக் கொண்டுள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற்று, வடக்கு- வடமேற்கு திசையில் அடுத்த மூன்று தினங்களில் நகரக்கூடும்.

ஜூன் 08- ஆம் தேதி முதல் ஜூன் 12- ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். இன்றும், நாளையும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்ஸியஸ் அளவில் இருக்கக் கூடும். ஒரு சில இடங்களில் இயல்பிலிருந்து 2 டிகிரி முதல் 4 டிகிரி செல்ஸியஸ் அதிகமாக இருக்கக் கூடும்.

ஆளுநர் பேசும் அரசியல் கருத்துகளை ஏற்க முடியாது- செல்லூர் ராஜூ

கர்நாடக கடலோரப் பகுதிகள் மற்றும் மத்திய மேற்கு, மத்திய கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய பகுதிகளில் 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ