
மணிப்பூரில் முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக குக்கி மக்கள் கூட்டணி கட்சி அறிவித்துள்ளது.

கருணாநிதி நினைவுத் தினம்- அமைதி பேரணி தொடங்கியது!
மணிப்பூர் மாநிலத்தில் மைத்தேயி மற்றும் குக்கி சமூகத்தினரிடையே கடந்த மூன்று மாதங்களாக மோதல் நீடித்து வருவது தேசிய அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் மாநில முதலமைச்சர் பிரேன் சிங்கிற்கு அளித்து வந்த ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ள குக்கி மக்கள் கூட்டணி, அதற்கான கடிதத்தை அம்மாநில ஆளுநர் அனுசுயாவுக்கு அனுப்பியுள்ளது.
அந்த கடிதத்தில், ‘கலவரங்கள் முடிவுக்கு வராத நிலையில், இனியும் அரசுக்கு ஆதரவு அளிப்பது’ சரியாக இருக்காது’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. குக்கி மக்கள் கூட்டணியின் அறிவிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
குக்கி மக்கள் கூட்டணி ஆதரவை வாபஸ் பெற்றதால், முதலமைச்சர் பிரேன் சிங் அரசுக்கு எந்த ஆபத்தும் ஏற்படாது. 70 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட மணிப்பூர் சட்டப்பேரவையில், பிரேன் சிங் அரசுக்கு 37 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவு உள்ளது. ஆதரவை வாபஸ் பெற்ற குக்கி மக்கள் கூட்டணிக் கட்சிக்கு 2 சட்டமன்ற உறுப்பினர்களே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.