இதுவே கடைசி வாய்ப்பு. பான் கார்டு வைத்திருக்கும் அனைவரும் ஆதாருடன் இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இல்லாவிடில் சம்பளம் கிடைப்பதில் கூட சிரமம் ஏற்படும் அபாயம் உள்ளது.
2026 ஜனவரி 1ஆம் தேதி முதல் நிறைய மாற்றங்கள் ஏற்பட உள்ளன. குறிப்பாக, பான் கார்டு விஷயத்தில் மிக முக்கியமான விதிமுறைகள் கொண்டுவந்துள்ளது. ஆதாருடன் பான் எண்ணை இணைக்காதவர்கள் பல பிரச்சனைகள் வரப்போகிறது. அவர்கள் வாங்கும் சம்பளம் நின்றுபோகலாம். அதேபோல, SIP பங்களிப்புகளில் தடை ஏற்படலாம். மேலும் பல நிதி சார்ந்த சிக்கல்களையும் சந்திக்க நேரிடும். இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதவர்களின் பான் எண் 2026 ஜனவரி 1 முதல் செயல்படாது என்பதை நினைவில் வைத்துக்கொள்ளவும்.
வரி தாக்கல் செய்வது முதல், ரீஃபண்ட் பணம் பெறுவது வரை அனைத்து நிதி சார்ந்த நடவடிக்கைகளுக்கும் பான் கார்டு அவசியமாக்கப்பட்டுள்ளது. பான் எண் செயலற்றதாகிவிட்டால் வருமான வரி அறிக்கையை (ITR) தாக்கல் செய்ய இயலாது. மேலும், பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான செயல்முறைகளிலும் பாதிக்கப்படலாம். சம்பளம் பெறுவதிலும், SIP முதலீடுகளைத் தொடர்வதிலும் தடைகள் ஏற்படும். வங்கிகள் உங்கள் பணப் பரிவர்த்தனைகளையும் முதலீடுகளையும் முடக்கவும் வாய்ப்புள்ளது.

இந்த விதிமுறை அனைவருக்கும் பொருந்தாது. வெளிநாடு வாழ் இந்தியர்கள் (NRIs), 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் சில குறிப்பிட்ட மாநிலங்களில் வசிப்பவர்களுக்கு இதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த விலக்குகள் குறித்து வருமான வரித் துறையிடம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
பான் மற்றும் ஆதார் எண்ணை இலவசமாக இணைப்பதற்கான கடைசி தேதி கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 30 ஆம் தேதி அன்றே முடிந்துவிட்டது. ஆனால் தற்போது 1,000 ரூபாய் கட்டணமாக செலுத்தி பான் எண் மற்றும் ஆதார் எண்ணை இணைத்துக்கொள்ளும் நடைமுறை செயல்பாட்டில் உள்ளது. இவ்வாண்டு டிசம்பர் 31ஆம் தேதிக்குள் ஆதார் மற்றும் பான் எண்ணை இணைக்காதவர்களின் பான் எண் 2026 ஜனவரி 1 முதல் செயல்படாது என அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஒருவேளை உங்கள் பான் எண். 2026 ஜனவரி 1 முதல் செயலற்றதாகிவிட்டால் ஒரு குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி அதை மீண்டும் செயல்படுத்தலாம். இந்த செயல்முறைக்கு சுமார் 30 நாட்கள் ஆகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதி அமைச்சகம் மற்றும் வருமான வரித்துறையினர் பல ஆண்டுகளாக மக்களை பான் மற்றும் ஆதார் எண்ணை இணைக்குமாறு வலியுறுத்துகின்றனர். இந்த இணைப்பைச் செய்வதன் மூலம் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய நிதி சார்ந்த பிரச்சனைகளைத் தவிர்க்கலாம். பான் எண் என்பது ஒரு தனிநபரின் நிதி அடையாளமாகும். ஆதார் எண் என்பது ஒரு தனிநபரின் அடையாளச் சான்றாகும். இந்த இரண்டையும் இணைப்பது அரசின் நிதி சார்ந்த சேவைகளை எளிதாக்குவதோடு, வரி ஏய்ப்பையும் தடுக்க உதவுகிறது.
உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டைக் வாங்க அல்லது விற்க விரும்பினால் அதற்கு பான் எண் அவசியம். அதேபோன்று, வங்கியில் ஒரு குறிப்பிட்ட தொகைக்கு மேல் பணப் பரிவர்த்தனை மேற்கொள்ளும் போது பான் எண் கேட்கப்படும். உங்கள் பான் எண் செயலற்றதாகிவிட்டால் இதுபோன்ற முக்கிய நிதி சார்ந்த நடவடிக்கைகளை உங்களால் மேற்கொள்ளமுடியாது. எனவே, டிசம்பர் 31ஆம் தேதிக்குள் உங்கள் பான் எண்ணை ஆதார் எண்ணுடன் இணைத்துக்கொள்வது மிகவும் அவசியம். இந்த இணைப்பை வருமான வரித் துறையின் இணையதளம் மூலமாகவோ அல்லது பிற அங்கீகரிக்கப்பட்ட வழிகள் மூலமாகவோ செய்துகொள்ளுமாறு அறிவிறுத்தப்பட்டுள்ளது.
30 ராமேஸ்வரம் மீனவர்கள் நிபந்தனையுடன் விடுதலை – இலங்கை நீதிமன்றம்


