
இந்திய அணிக்கு இன்றும், என்றும் நாடு ஆதரவாக இருக்கும் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இந்திய அணிக்கு தங்கலான் படக்குழு வாழ்த்து
இந்திய பிரதமர் நரேந்திர மோடி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் தோல்வியுற்றாலும், இந்த தொடர் முழுவதும் மிகச்சிறப்பாக விளையாடியது இந்திய அணி. இந்திய அணி வீரர்கள் திறமையான ஆட்டத்தால் நாட்டிற்கு பெருமைச் சேர்த்துள்ளனர். சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலியா அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதைத் தொடர்ந்து, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டியில் வென்று கோப்பையை கைப்பற்றிய ஆஸ்திரேலியா அணிக்கும், உலகக்கோப்பைக் கிரிக்கெட் தொடரில் அரையிறுதி வரை தொடர்ச்சியாக வெற்றி பெற்று வந்த இந்திய அணிக்கும் எனது பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.
திரிஷா இல்லனா மடோனா ….. லியோ வெற்றி விழாவிலும் இழிவாக பேசிய மன்சூர் அலிகான்!
அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், “உலகக்கோப்பைக் கிரிக்கெட் இறுதிப் போட்டி தோல்வியால் இத்தொடரில் இந்திய அணி செலுத்திய ஆதிக்கம் மறைந்து விடாது. இந்திய அணியின் சிறப்பான ஆட்டத்தால் ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை. சாம்பியன் பட்டம் வென்ற ஆஸ்திரேலிய அணிக்கு எனது பாராட்டுக்கள்” எனத் தெரிவித்துள்ளார்.