spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

-

- Advertisement -

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

கலைஞரின் 101-வது பிறந்த நாளை ஒட்டி டெல்லி அண்ணா அறிவாலயத்தில் அவரது படத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் மரியாதை செலுத்தினர்.

we-r-hiring

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

கலைஞரின் உருவப் படத்திற்கு நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரான சோனியா காந்தி மலர் தூவை மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்தித்த அவர், கருணாநிதி நூற்றாண்டு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டுள்ளது மகிழ்ச்சி என்றும் பல முறை அவரை சந்தித்து, அவரோடு இணைந்து செயல்பட்டதை நினைவு கூர்கிறேன். பல நேரங்களில் அவரது வார்த்தைகளை கேட்டு, ஆலோசனைளை கேட்டு அதன் மூலம் பயனடைந்துள்ளோம் என்றும் இந்த நாளில் தி.மு.க.வினர் அனைவருக்கும் எனது வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன் என்று சோனியா காந்தி தெரிவித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி அவரது படத்துக்கு மலர் தூவி ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

மேலும் அவர் பேசுகையில், தமிழ் மொழியை பாதுகாத்த, கலாச்சாரத்தை உயர்த்தி பிடித்து மாபெரும் தலைவருக்கு மரியாதை செலுத்துவதில் பெருமை கொள்கிறேன் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டி.ராஜா, கலைஞரின் தமிழால் கவரப்பட்டவர்களில் நானும் ஒருவன் என்றும் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர், சமூக நீதியை உயர்த்தி பிடித்தவர் கலைஞர் என்று தெரிவித்துள்ளார்.

https://x.com/INCIndia/status/1797493394148618404

நவீன தமிழ்நாட்டின் வரலாற்றை கலைஞரை தவிர்த்து விட்டு எழுத முடியாது என்றும் இந்தியாவின் நெருக்கடியான காலகட்டத்தில் கலைஞருடன் இணைந்து பணியாற்றியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்த போது தெரிவித்துள்ளார்.

கலைஞருக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் புகழாரம்

டெல்லியில் சோனியா காந்தி, ராகுல் காந்தி உடன் திமுக எம்பிக்களான டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் டி.ராஜா, பரூக் அப்துல்லா, சீதாராம் யெச்சூரி ஆகியோர் கலைஞரின் உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

MUST READ