Homeசெய்திகள்இந்தியாகர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்

-

கர்நாடகாவில் காந்தி சிலை உடைப்பு- பொதுமக்கள் போராட்டம்

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் காந்தி சிலையை உடைத்த மர்ம நபர்களை கண்டித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ஹொலே ஹொண்ணூர் என்ற கிராமத்தின் மார்க்கெட் பகுதியில் பொன் நிறத்தால் செய்யப்பட்டிருந்த காந்தி சிலை வைக்கப்பட்டிருந்தது. இந்த காந்தி சிலையை நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் அடித்து உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இன்று காலை காந்தி சிலை சேதமடைந்திருந்ததை கண்ட கிராம மக்கள் இந்த செயலை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையின் மோப்பநாய் உதவியுடன் ஆதாரங்களை சேகரித்தனர். பின்பு குற்றவாளிகளை பிடிக்க மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்றும் கிராம மக்களுக்கு வாக்குறுதி அளிக்கப்பட்ட நிலையில் போராட்டம் கைவிடப்பட்டது. குற்றவாளிகளை பிடிக்க முதற்கட்டமாக கிராமத்தை சுற்றியுள்ள சிசிடிவி கேமராக்களை காவல்துறை ஆய்வு செய்து வருகின்றனர்.

MUST READ