spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாசட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்!

-

- Advertisement -

 

சட்டமன்ற உறுப்பினர், அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே மோதல்!
File Photo

முதலமைச்சரின் பிறந்தநாள் வாழ்த்துப் பேனர் வைத்ததில், இரு பிரிவினரிடையே தகராறு ஏற்பட்டது. ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களின் ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலால், நள்ளிரவு வரை பதற்றம் நீடித்தது.

we-r-hiring

15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!

புதுச்சேரி மாநிலத்தில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிறுவனரும், புதுச்சேரி மாநில முதலமைச்சருமான ரங்கசாமியின் பிறந்தநாள், வரும் ஆகஸ்ட் 4- ஆம் தேதி கொண்டாடப்படவுள்ளது. இதனை முன்னிட்டு, என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள், புதுச்சேரி முழுவதும் பேனர்கள் வைத்துள்ளனர். பேனர் வைத்ததில், அமைச்சர் சந்திர பிரியங்காவின் ஆதரவாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் திருமுருகனின் ஆதரவாளர்களிடையே மோதல் ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து, எம்.எல்.ஏ. திருமுருகனின் ஆதரவாளர்கள் மீது வழக்குப்பதிவுச் செய்யக்கோரி, அமைச்சரின் ஆதரவாளர்கள் கோட்டச்சேரி காவல் நிலையம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக, அமைச்சர் சந்திர பிரியங்கா போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதால், அவர்கள் அங்கிருந்து கலைந்துச் சென்றனர்.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?

பின்னர், திருமுருகன் ஆதரவாளர்கள் ராஜ்குமார் உள்பட ஐந்து பேர் மீது கோட்டச்சேரி காவல்துறையினர் வழக்குப்பதிவுச் செய்துள்ளனர்.

MUST READ