Homeசெய்திகள்இந்தியா'திருடுப்போன மொபைல் ஃபோன்களை ஈஸியா கண்டுபிடிக்கலாம்'- விரிவான தகவல்!

‘திருடுப்போன மொபைல் ஃபோன்களை ஈஸியா கண்டுபிடிக்கலாம்’- விரிவான தகவல்!

-

- Advertisement -

 

'திருடுப்போன மொபைல் ஃபோன்களை ஈஸியா கண்டுபிடிக்கலாம்'- விரிவான தகவல்!
File Photo

மொபைல் போன்களைப் பயன்படுத்துவோரின் நலன் கருதி, மத்திய தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் ‘சஞ்சார் சாத்தி’ என்ற பெயரில் பிரத்யேக இணையதளத்தைத் தொடங்கியுள்ளது.

we-r-hiring

கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000- காசோலை ரத்து

திருடுபோன மொபைல் ஃபோனின் பயன்பாட்டை முடக்கவும், அந்த ஃபோன் தற்போது எங்கிருக்கிறது என்பதைக் கண்டுப்பிடிக்கவும் இந்த இணையதளம் முக்கிய பங்காற்றுகிறது. மேலும், பயன்படுத்தப்பட்ட மொபைல் ஃபோனை வாங்கும் போது, அதன் நம்பகத்தன்மையை உறுதிச் செய்யவும் இந்த இணையதளம் உதவுகிறது.

இந்த இணையதளத்தின் சோதனை பயன்பாட்டின் போது, காணாமல் போன 2,500 காணாமல் போன ஃபோன்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மத்திய தகவல் மற்றும் தொலைத்தொடர்புத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதிகளவு டீ, காபி அருந்துவோர்களின் கவனத்திற்கு! – மருத்துவர்களின் அறிவுறுத்தல்!

மொபைல் ஃபோன் காணாமல் போனாலோ, திருடுபோனாலோ உடனடியாக https://sancharsaathi.gov.in/ என்ற இணையதளப் பக்கத்திற்கு சென்று மொபைல் எண்ணை பதிவு செய்து, ‘Login’ செய்து புகார் தெரிவிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

MUST READ