கள்ளச்சாராய வியாபாரிக்கு ரூ.50,000- காசோலை ரத்து
கள்ளச்சாராயம் விற்றதாக கைதான அமாவாசைக்கு அறிவித்த 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்து 19 பேர் பலியான சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், கள்ளச்சாராயம் விற்பனை தொடர்பாக தமிழகம் முழுவதும் இரண்டு நாளாக தீவிர வேட்டை நடத்தப்பட்டது. இதில் தமிழகம் முழுவதும் 1842 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1558 குற்றவாளிகள் கைது செய்து, 19,028 லிட்டர் கள்ளச்சாராயம் கைப்பற்றப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை… pic.twitter.com/oj3tA72AAN
— Edappadi K Palaniswami (@EPSTamilNadu) May 16, 2023

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூரில் கள்ளச்சாராயம் குடித்து பலரும் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு காரணமானவர் என்று இந்த அரசு வழக்கு பதிவு செய்துள்ள அம்மாவாசை என்பவர் திமுக ஒன்றிய கவுன்சிலர் நாகப்பன் என்கிறவருடைய தம்பி ஆவார். குற்றம் சாட்டப்பட்டுள்ள அம்மாவாசை தானும் அந்த மதுபானத்தை அருந்தியதாக அவரும் மருத்துவமனையில் தன்னை அனுமதித்துக் கொண்டார்.
இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த பாதிக்கப்பட்டவர்களுடன் சேர்த்தசாராய வியாபாரி அமாவாசை என்பவருக்கும் நிவாரணமாக ரூ.50 ஆயிரம் காசோலை வழங்கப்பட்டது. இதற்கு கண்டனங்கள் வலுத்தன. சாராய வியாபாரி அமாவாசை என்பவருக்கு ரூ.50 ஆயிரம் இழப்பீடு வழங்குவதா? என ஈபிஎஸ் மற்றும் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தனர். இதனையடுத்து செங்கல்பட்டு விஷச் சாராய மரணங்களில் தொடர்புடையவருக்கு வழங்கப்பட்ட காசோலை ரத்து செய்யப்படுவதாக திமுக அரசு அறிவித்துள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த அமாவாசை ஏற்கனவே கைது செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடதக்கது.


