Homeசெய்திகள்இந்தியாமணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!

மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!

-

 

மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!
File Photo

கடந்த மூன்று மாதங்களாக மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் நீடிக்கும் நிலையில், பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட கொலைச் செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியின் லியோ….. அடுத்த அறிவிப்பு எப்போது தெரியுமா?

இந்த நிலையில், காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய ‘இந்தியா’ கூட்டணியைச் சேர்ந்த 21 எம்.பி.க்கள், இரண்டு நாள் பயணமாக மணிப்பூருக்கு சென்றுள்ளனர். அங்கு வன்முறையால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களையும், சேதமடைந்த பகுதிகளையும் எம்.பி.க்கள் குழு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தது.

மணிப்பூர் ஆளுநரைச் சந்தித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு!
Photo: Manipur Governor

அத்துடன், மணிப்பூர் மாநிலத்தில் தற்போது நிலவும் சூழல் குறித்து அம்மாநில மக்களிடம் கேட்டறிந்த எம்.பி.க்கள் குழு அதனை பதிவுச் செய்துக் கொண்டது. அதேபோல், கடந்த மே 4- ஆம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணின் தாயாருடன் எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்துப் பேசியது.

ஜார்ஜ் மரியான், சார்லி கூட்டணியின் எறும்பு படத்தின் ரிலீஸ் தேதி வெளியீடு!

இந்த நிலையில், மணிப்பூர் மாநிலத்தின் தலைநகர் இம்பாலில் உள்ள ஆளுநர் மாளிகையில், அம்மாநில ஆளுநர் அனுசுயாவை எதிர்க்கட்சிக்களைச் சேர்ந்த எம்.பி.க்கள் குழு நேரில் சந்தித்துப் பேசியது. அப்போது, மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட விரைந்து நடவடிக்கை எடுக்க எம்.பி.க்கள் குழு, ஆளுநரிடம் கோரிக்கை மனுவை வழங்கி வலியுறுத்தியுள்ளது.

அதைத் தொடர்ந்து, குகி மற்றும் மைத்தேயி சமூகங்களைச் சேர்ந்த மக்களைச் சந்தித்து, இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் குறைகளைக் கேட்டறிந்து வருகின்றனர்.

15 வருடங்களுக்குப் பிறகு ரீரிலீஸ் செய்யப்படும் சுப்ரமணியபுரம்….. சசிகுமார் அறிவிப்பு!

மணிப்பூர் நிலவரத்தை ஆய்வு செய்து வரும் எம்.பி.க்கள் குழு, அதனை அறிக்கையாக, நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

MUST READ