Homeசெய்திகள்இந்தியாதேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதச்சார்பற்ற ஜனதா தளம்?

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதச்சார்பற்ற ஜனதா தளம்?

-

 

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையும் மதச்சார்பற்ற ஜனதா தளம்?
File Photo

மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்து வருவதாக கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் சாலையில் கோரவிபத்து…4 மீனவ பெண்கள் உயிரிழப்பு… தமிழக அரசு நிதியுதவி அறிவிப்பு!

கர்நாடகா மாநிலத்தில் அண்மையில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியிடம் பா.ஜ.க. ஆட்சியைப் பறிக்கொடுத்தது. ஆட்சி அமைப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடா தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், 19 சட்டமன்றத் தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது.

இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை, “தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான குமாரசாமி விருப்பம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, பா.ஜ.க. தலைவர்கள், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா உடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

பேச்சுவார்த்தை முடிந்த பிறகு கூட்டணியில் இணைவது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்” எனத் தெரிவித்துள்ளார்.

‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

2024- ஆம் ஆண்டு நடைபெற மக்களவை பொதுத்தேர்தலையொட்டி, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்தி ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ள பா.ஜ.க. தலைமைத் தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ