spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியா'NDA' என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!

‘NDA’ என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!

-

- Advertisement -

 

'NDA' என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!
Photo: BJP

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 18) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே., புதிய தமிழகம், த.மா.கா உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்றன. இதில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பிரதமருக்கு அருகில் அமர்ந்திருந்தார்.

we-r-hiring

அமலாக்கத்துறை மீது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

கூட்டத்தில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “மாநிலங்களை வலுப்படுத்துவதன் மூலம் நாட்டை வலுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் NDA செயல்படுகிறது. யாரையும் எதிர்ப்பதற்காக தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்படவில்லை. நாட்டை வளர்ச்சி அடையச் செய்ய வேண்டும் என்பதற்காகவே தேசிய ஜனநாயகக் கூட்டணி அமைக்கப்பட்டது.

ஸ்திரத்தன்மையுடன் நடைபெறும் ஆட்சியே இந்தியா மீது உலக நாடுகளுக்கு நம்பிக்கை பிறக்க காரணம். அரசியல் கூட்டணிக்கு நாட்டில் மிகப்பெரிய பாரம்பரியம் உள்ளது. எதிர்மறையான சிந்தனையுடன் அமைக்கப்படும் எந்தவொரு கூட்டணியும் வெற்றி பெறாது. NDA-வில் N- புதிய இந்தியா, D- நாட்டின் வளர்ச்சி, A- மக்கள் மற்றும் பிராந்தியத்தின் விருப்பம்.

“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

எதிர்க்கட்சியாக இருந்த காலத்திலும் எப்போதும் நேர்மறை அரசியல் செய்தோம். எதிர்க்கட்சியாக இருந்த போது அப்போதைய அரசின் மோசடிகளை வெளியே கொண்டு வந்தோம். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சிறிய கட்சி, பெரிய கட்சி என்பதில்லை. அனைவரும் ஒன்றாக ஒரே இலக்கை நோக்கிப் பயணிக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ