Homeசெய்திகள்தமிழ்நாடு"புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

“புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்”- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!

-

- Advertisement -

 

"புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும்"- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேட்டி!
Photo: CM MKStalin

பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு இன்று (ஜூலை 18) இரவு 08.00 மணிக்கு சென்னை திரும்பிய தி.மு.க. தலைவரும், தமிழக முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

உம்மன் சாண்டி மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல்

அப்போது அவர் கூறியதாவது, “2024 நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்துள்ளோம். 2024 நாடாளுமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வியூகங்கள் வகுக்கப்பட்டுள்ளன. பாட்னா மற்றும் பெங்களூருவில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் நம்பிக்கை மற்றும் மகிழ்ச்சியைத் தருகிறது. அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து எதிர்க்கட்சிகளின் அடுத்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும்.

யார் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதை விட, யார் ஆட்சியில் இருக்கக் கூடாது என்பதை முன் வைத்து செயல்படுகிறோம். புதிய இந்தியா உருவாகும் ஆண்டாக 2024 அமையும். அமலாக்கத்துறை சோதனை போன்ற அனைத்தையும் சட்ட ரீதியாக சந்திக்கத் தயாராக உள்ளோம். அமலாக்கத்துறை சோதனை என்பது எதிர்பார்த்தது தான்; அதை எதிர்கொள்ள நாங்கள் தயாராக உள்ளோம்.

“பிரதமர் பதவிக்கு காங்கிரஸ் கட்சி ஆசைப்படவில்லை”- மல்லிகார்ஜுன கார்கே திட்டவட்டம்!

பிரதமரால் ஊழல்வாதிகள் என குற்றம் சாட்டப்பட்டோர் அவரது அருகிலேயே அமர்ந்துள்ளனர்” எனத் தெரிவித்துள்ளார்.

MUST READ