spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது - நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது – நிர்மலா சீதாராமன்

-

- Advertisement -

இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது – நிர்மலா சீதாராமன்

இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

nirmala sitharama

மக்களவையில் உரையாற்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், “மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 900 படுக்கைகள் உள்ளது மற்ற எய்ம்ஸ் மருத்துவமனைகளில் 750 படுக்கை வசதிகள் மட்டுமே உள்ள நிலையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கூடுதலாக 150 படுக்கை வசதிகள் உள்ளது. மதுரை எய்ம்ஸ்-ல் 50 மாணவர்கள் ஏப்ரல் 2022 முதல் படித்து வருகின்றனர். மதுரையில் ஜைக்கா கடன் மூலம் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயம் கட்டப்படும். மத்திய அரசுதான் முழுக்க முழுக்க ரூ.1977 கோடி மதிப்பீட்டில், ரூ.1627 கோடி கடனில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையை கட்டிக் கொடுக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு எந்த நிதிச் சுமையும் இல்லை. இதனால் அதைப்பற்றி கவலைப் பட வேண்டாம்.

we-r-hiring

இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக ஆய்வு நிறுவனங்கள் அறிக்கை தந்துவருகின்றன. 2023-24 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.5% ஆக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. உலகிலேயே பொருளாதாரம் வேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உள்ளது. மத்திய அரசின் கொள்கைகளால் கடந்த 9 ஆண்டுகளாக நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டில் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளோர் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவருகிறது” என்றார்.

MUST READ