தனியார் நிறுவனங்களில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டு வர எந்த திட்டமும் இல்லை என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.
மக்களவையில் உறுப்பினர் சஞ்சய் பாட்டியா எழுப்பிய கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் ரமேஷ்வர் தெளி, மாவட்ட மற்றும் மாநில அளவில் வேலைவாய்ப்பின்மையை குறைப்பதற்கு தனியார் துறையில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் இட ஒதுக்கீடு கொண்டுவர பரிசீலனை எதுவும் இருக்கிறதா என உறுப்பினர் கேள்வி எழுப்பி இருக்கிறீர்கள் அத்தகைய எந்த பரிசீலனையும் இல்லை என்ற பதிலை தெரிவித்துக் கொள்வதாக கூறியுள்ளார்.

அரசு துறைகளில் வேலை வாய்ப்புக்கான இட ஒதுக்கீடு தொடர்பான கொள்கைகள் அவ்வப்போது வகுக்கப்பட்டு உரிய நேரத்தில் வேலைகள் வழங்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்துள்ளார்