spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாவயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்

வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்

-

- Advertisement -

வயநாடு தேர்தல் தேதி அறிவிக்க அவசரமில்லை- தேர்தல் ஆணையம்

அவதூறு வழக்கில் ராகுல்காந்தியை குற்றவாளி என அறிவித்த சூரத் நீதிமன்றம், அவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.

ராகுல் காந்தி

இதனை தொடர்ந்து நேற்று அவர் எம்பி பதவியிலிருந்து தகுதிநீக்கம் செய்யப்பட்டார். இன்று அவரது தொகுதியான கேரளா வயநாடு எம்பி பதவி சட்டவிதிகளின்படி காலாவதியானதாக மக்களவை செயலகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

we-r-hiring

இந்நிலையில் இன்று கர்நாடக சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில், தேர்தல் ஆணையம் வயநாடு தொகுதிக்கு தேர்தலை அறிவிக்கவில்லை. இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார், “கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க 6 மாதம் வரை அவகாசம் உள்ளது. தீர்ப்பை எதிர்த்து ராகுல்காந்தி மேல்முறையீடு செய்ய ஒரு மாதம் அவகாசம் உள்ளது. நீதிமன்ற நடவடிக்கைகளை கண்காணித்துவருகிறோம். எனவே வயநாடு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்க அவசரவில்லை. ராகுல் காந்தி தண்டனை விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருக்கிறோம்” என்றார்.

MUST READ