சபரிமலை மண்டலப் பூஜைக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணிக்கு தொடங்கியது.
மகரவிளக்கு சீசனை முன்னிட்டு, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகிறது. இதுவரை 24 லட்சத்திற்கும் அதிகமானோர் சபரிமலை ஐயப்பனை தரிசனம் செய்துள்ளனர். தற்போது நாள்தோறும் இணையதளம் மூலமாக 70 ஆயிரத்திற்க்கும் மேற்பட்டோருக்கும், உடனடி முன்பதிவில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கும் தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது.

மகரவிளக்கு பூஜைக்கு முந்தைய 2 நாட்களிலும், மண்டல பூஜையை முன்னிட்டு டிசம்பர் 26, 27 ஆகிய தேதிகளிலும் தரிசனத்திற்கான ஆன்லைன் முன்பதிவு இதுவரை தொடங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் 26, 27 ஆகிய தேதிகளுக்கான ஆன்லைன் முன்பதிவு இன்று மாலை 5 மணி முதல் தொடங்கியது. 26ம் தேதி 30 ஆயிரம் பேருக்கும், 27ம் தேதி 35 ஆயிரம் பேருக்கும் www.sabarimalaonline.org என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம். பிரசித்தி பெற்ற மண்டல பூஜை வரும் 27-ம் தேதியுடன் இவ்வருட மண்டல காலம் நிறைவடையும்.
திராவிடக் கொள்கையை செயல்படுத்தியதில் கலைஞர் சாம்பியன் – தமிழச்சி தங்கபாண்டியன் புகழாரம்


