spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாதிருப்பதி தரிசன டிக்கெட் அறிவிப்பு: ஸ்ரீவாணி, ₹300 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ஆம் தேதி ஆன்லைனில் வெளியீடு.

திருப்பதி தரிசன டிக்கெட் அறிவிப்பு: ஸ்ரீவாணி, ₹300 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ஆம் தேதி ஆன்லைனில் வெளியீடு.

-

- Advertisement -

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட துவார தரிசனத்திற்காக, முதல் மூன்று நாட்களுக்கு நடைபெற்ற ஆன்லைன் எலெக்ட்ரானிக் குலுக்கல் (e-lottery) பதிவில் 24 லட்சத்து 5 ஆயிரத்து 237 பக்தர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் குலுக்கல் மூலம் 1.76 லட்சம் பேருக்கு மட்டுமே தரிசன அனுமதி வழங்கப்பட உள்ளது.

திருப்பதி தரிசன டிக்கெட் அறிவிப்பு: ஸ்ரீவாணி, ₹300 டிக்கெட்டுகள் டிசம்பர் 5-ஆம் தேதி ஆன்லைனில் வெளியீடு.
திருமலையில் இந்த மாதம் டிசம்பர் 30 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு வைகுண்ட துவார தரிசனம் வழங்கப்படவுள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலைத் தொடர்ந்து, இந்த ஆண்டு 10 நாட்களுக்கு உண்டான தரிசன டிக்கெட்டுகள் கவுண்டர்கள் மூலம் வழங்குவது முற்றிலும் ரத்து செய்யப்பட்டது.

we-r-hiring

குலுக்கல் முறை விவரங்கள்

வைகுண்ட ஏகாதசி, துவாதசி மற்றும் ஜனவரி 1 ஆம் தேதி ஆகிய முதல் மூன்று நாட்களுக்கு தரிசன டோக்கன்கள் எலெக்ட்ரானிக் குலுக்கல் முறையில் ஒதுக்க தேவஸ்தானம் முடிவு செய்தது.

  • பதிவு தொடங்கியது: நவம்பர் 27 ஆம் தேதி காலை 10 மணிக்கு.

  • பதிவு நிறைவு: நவம்பர் 30 மாலை 5 மணியுடன் நிறைவு.

  • மொத்தப் பதிவு: 24,05,237 பேர்.

  • தளங்கள் வாரியான பதிவு:

    • தேவஸ்தான இணையதளம்: 9,28,608 பேர்

    • மொபைல் செயலி: 13,29,112 பேர்

    • அரசு வாட்ஸ்அப் எண்: 1,45,517 பேர்

  • அனுமதி எண்ணிக்கை: 1,76,000 பேர் (முதல் 3 நாட்களுக்கு).

குலுக்கல் முடிவுகள் இன்று வெளியீடு

குலுக்கலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பக்தர்களுக்கு இன்று (டிசம்பர் 2) காலை 10 மணிக்கு குலுக்கல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்குப் பிற்பகல் 2 மணிக்கு மேல் அவர்களின் செல்போன் எண் மற்றும் மின்னஞ்சல் மூலம் தகவல் அனுப்பப்படும். அவர்கள் தங்களுக்கு வரும் இணைப்பைப் பயன்படுத்தி தரிசன டோக்கனைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரையிலான டிக்கெட்டுகள்

ஜனவரி 2 முதல் 8 ஆம் தேதி வரையிலான வைகுண்ட துவார தரிசனத்திற்கான டிக்கெட் விவரங்களை தேவஸ்தானம் அறிவித்துள்ளது:

  • ஸ்ரீவாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள்:

    • வெளியீடு தேதி: டிசம்பர் 5 ஆம் தேதி காலை 10 மணிக்கு.

    • எண்ணிக்கை: ஒரு நாளைக்கு 1,000 டிக்கெட்டுகள் வீதம், 7 நாட்களுக்கு 7,000 டிக்கெட்டுகள்.

  • ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்:

    • வெளியீடு தேதி: டிசம்பர் 5 ஆம் தேதி மதியம் 3 மணிக்கு.

    • எண்ணிக்கை: ஒரு நாளைக்கு 15,000 டிக்கெட்டுகள் வீதம், மொத்தம் 1.05 லட்சம் டிக்கெட்டுகள்.

    • முறை: முதலில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

நேரடி இலவச தரிசனம்

டிக்கெட் அல்லது டோக்கன் பெறாத பக்தர்களுக்காக, ஜனவரி 2 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை நேரடியாகத் திருப்பதியில் இலவச தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

MUST READ