Homeசெய்திகள்இந்தியாஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

-

ஜனநாயகத்தை பாதுகாக்கவும் அரசியல் சட்டத்தை பாதுகாக்கவும் நாட்டின் முற்போக்கான எதிர்காலத்தை வழங்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் என்று முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

இது குறித்து அவர் நாட்டு மக்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது.

பிரதமர் பதவிக்குரிய மாண்பையே நரேந்திர மோடி சீர்குலைத்துவிட்டதாக அவர் கண்டனத்தை பதிவு செய்துள்ளார். பிரதமர் மோடியின் அண்மைக்கால செயல்பாடுகளை மிகக் கடுமையான வார்த்தைகளில் மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார்.

https://www.apcnewstamil.com/news/politics/pm-modi-to-meditate-day-and-night/88004

பிரதமர் அலுவலகத்தின் தகுதியையும் அதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி மரணப்படுத்தி விட்டதாக மன்மோகன் சிங் விமர்சித்துள்ளார். தேர்தல் பிரச்சாரம் முழுவதும் வெறுப்பு பேச்சை மட்டுமே மோடி பேசி வருவதாக மன்மோகன் சிங் குற்றம் சாட்டி இருக்கிறார்.

ஜனநாயகத்தை பாதுகாக்க காங்கிரஸ் ஆட்சியால் மட்டுமே முடியும் – மன்மோகன் சிங்

இதற்கு முன்பு எந்த பிரதமரும் மோடியை போல் வெறுப்பு பேச்சையோ தரமற்ற உறையையோ கீழ்த்தரமான வார்த்தைகளையோ பயன்படுத்தியதில்லை என்று கடுமையாக சாட்டி உள்ள மன்மோகன் சிங் மக்களை பிளவுபடுத்தும் விதத்தில் மோடியின் பிரச்சாரம் இருப்பதாகவும் குற்றம் சாட்டி உள்ளார்.

குறிப்பிட்டு ஒரு சமுதாயத்தினரையும் எதிர்க்கட்சியினரையும் தரம் தாழ்ந்த முறையில் பிரதமர் மோடி விமர்சிக்கிறார் என்றும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். தமது வாழ்க்கையில் சமூகங்களுக்கு இடையேயான பாகுபாட்டை ஒருபோதும் காட்டியதில்லை என்று குறிப்பிட்டுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் நாட்டின் சொத்துக்களில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தாம் பேசியதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளதை திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

MUST READ