இரவு, பகலாக தியானம் செய்யவுள்ள பிரதமர் மோடி
மக்களவை தேர்தல் ஜூன் 1 ஆம் தேதி இறுதி கட்டத் தேர்தல் நடைபெறவுள்ளது. அதற்கான பிரச்சாரம் 30 ஆம் தேதி மாலை நிறைவடையவுள்ளது.
தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் பிரதமர் மோடி வரும் 30 ஆம் தேதி மாலை கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் பாறையில் இரவு பகலாக தியானம் செய்யவுள்ளதாக பிரதமர் அலுவலகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
3 நாட்கள் தியானம் மேற்கொள்கிறார்
மூன்று நாட்கள் விவேகானந்தர் பாறையில் தங்கியிருந்து இரவு பகலாக தியானம் செய்யும் பிரதமர் ஜூன் 1 ஆம் தேதி டெல்லி திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வரும் 30 ஆம் தேதி டெல்லியில் இருந்து விமானத்தில் கேரள மாநிலம் திருவனந்தபுரம் வரும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்கு வருகிறார். அதன் பின்னர் படகு மூலம் விவேகானந்தர் பாறையில் உள்ள தியான மாடத்திற்கு சென்று இரவு பகலாக தியானம் செய்ய உள்ளார்.
கடந்த 2019ல் தேர்தல் பிரச்சாரம் முடிந்ததும் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள கேதர்நாத்திற்கு சென்று சாம்பல் நிற அங்கி, இடுப்பில் காவி நிறம் துணி, தலையில் உத்தரகாண்ட் பாரம்பரிய தொப்பி அணிந்து அரை மணி நேரம் தியானத்தில் ஈடுபட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.