- Advertisement -
ஜூலை 17,18-ம் தேதிகளில் எதிர்க்கட்சிகள் கூட்டம்
பெங்களூருவில் ஜூலை 17,18 ஆம் தேதிகளில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
ஜூலை 13-ல் பாட்னாவில் நடந்த ஆலோசனை கூட்டம் வெற்றி பெற்றதை அடுத்து 2-வது கூட்டம் பெங்களூருவில் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்திருந்தது. இந்த ஆலோசனைக்கூட்டம் ஜூலை 17,18 ஆம் தேதி நடைபெறும் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார். ஏற்கனவே ஜூலை 13, 14-ம் தேதிகளில் கர்நாடகா, பீகார் சட்டப்பேரவை கூட்டம் நடைபெறுவதால் தேதி மாற்றப்பட்டுள்ளது. தேசியவாத காங்கிரஸில் பிளவு ஏற்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சி ஒற்றுமையை வலுப்படுத்த பெங்களூரு கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள் ஒன்றுபடுவதை சீர்குலைக்கவே தேசியவாத காங்கிரஸை பாஜக பிளவுப்படுத்தியதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளார்.