அரசியல் களத்தை எதிர்கட்சிகள் சரியாக புரிந்து கொண்டால் நிச்சயம் பாஜகவை தோற்கடிக்க முடியும் என்று டெல்லியில் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
Mr @RahulGandhi all to address press conference at AICC headquarters pic.twitter.com/sRUes3bBpg
— Supriya Bhardwaj (@Supriya23bh) December 31, 2022

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்தார். பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ். தன்னை எதிர்க்கும் போது அதிலிருந்து பயிற்சி எடுத்து கொள்கிறேன். வெறுப்புணர்வு, தவறான பொருளாதார கொள்கை உள்ளிட்டவைக்கு மாற்றான புதிய நோக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதாலே நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார்.
மக்களை சந்திக்க வேண்டும் என்றால் நடந்து செல்ல வேண்டும் மாறாக குண்டு துளைக்காத காரில் அமர்ந்து சென்றால் மக்களின் பிரச்சனைகளை அறிந்துக் கொள்ள முடியாது என தெரிவித்தார். இதுவரை மக்களை சந்தித்தன் அடிப்படையில் சொல்கிறேன், வரும் தேர்தலில் எதிர்கட்சிகள் களத்தை சரியாக புரிந்து கொண்டால் பாஜகவை நிச்சயம் தோற்கடிக்க முடியும் என்றார். 2024 தேர்தலில் காங்கிரஸ் பிரதமர் வேட்பாளர் ராகுல்காந்தியா? என கேட்டபோது, ஒற்றுமையாக இருக்க வேண்டும், அன்பு நிறைந்த நாடாக இந்தியா இருக்க வேண்டும் என்பதே என் நோக்கம் என ராகுல்காந்தி கூறினார்.


