
இந்தியா- பிரான்ஸ் இடையிலான நட்புறவின் 25வது ஆண்டை நினைவுக்கூறும் வகையில், வரும் ஜூலை மாதம் பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரீசில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார்.

பாதுகாப்பு படைக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நீடிக்கும் சண்டை
அதேபோல், அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஜெர்மனியின் முன்னாள் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல் உள்ளிட்ட தலைவர்களும் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
பாரீஸில் பிரம்மாண்டமான அணிவகுப்பு நிகழ்ச்சிகளுக்கு பிரான்ஸ் அரசு ஏற்பாடு செய்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் விடுத்த அழைப்பின் பேரில், விழாவில் பங்கேற்பதற்காக வரும் ஜூலை 14- ஆம் தேதி அன்று டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரான்ஸ் நாட்டின் பாரிஸூக்கு செல்லவுள்ளார்.
சுற்றுப்பயணத்தின் போது, பிரான்ஸ் நாட்டு தலைவர்களைப் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளிடையேயான ஒத்துழைப்பு, வர்த்தகம், பொருளாதாரம், சர்வதேச விவகாரங்கள் உள்ளிட்டவைக் குறித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேபோல், இந்தியா- பிரான்ஸ் இடையே முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.