spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாஇந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி- காரணம் என்ன தெரியுமா?

இந்தோனேசியா செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி- காரணம் என்ன தெரியுமா?

-

- Advertisement -

 

ஏப்ரல் 29 ஆம் தேதி காசி தெலுங்கு சங்கமத்தில் பிரதமர் மோடி

we-r-hiring

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பான ஆசியானின் தலைவர்களுடன் இந்தோனேசியாவில் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தவிருக்கிறார்.

தீபாவளி ரேஸில் இருந்து விலகுகிறதா அயலான்!?

20வது ஆசியான்- இந்தியா உச்சி மாநாடு மற்றும் 18வது கிழக்காசிய மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடி, இன்று (செப்.06) இரவு இந்தோனேசியாவின் ஜகர்த்தாவுக்கு புறப்பட்டு செல்கிறார். ஆசியான் நாடுகளுடன் வர்த்தகத்தைப் பெருக்குவது மற்றும் பாதுகாப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பிரதமர் பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும் ஜி20 மாநாடு இந்தியாவில் நடைபெறுவதைக் கருத்தில் கொண்டு, பிரதமர் நரேந்திர மோடி, நாளையே (செப்.07) நாடு திரும்புவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமரின் பயணத்தின் போது, சீனா வெளியிட்ட வரைப்படம் குறித்து விவாதிக்கப்படுமா என எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த வெளியுறவுத்துறை அதிகாரிகள், பிரதமரின் ஆலோசனைகளில் எந்த பிரச்சனைகள் எழுப்பப்படும் என்பது குறித்து சொல்ல முடியாது எனத் தெரிவித்தனர்.

பிரதமர் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய சூழல் உள்ளது என்றும், எந்த குறிப்பிட்ட நாட்டு தலைவருடனும் தனிப்பட்ட பேச்சுவார்த்தை நடைபெறாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இருந்து வியட்நாம் மற்றும் இந்தோனேசியாவுடன் விமான சேவை இருப்பது போல், ஆசியான் அமைப்பின் பிற நாடுகளுக்கும் விமான சேவையைத் தொடங்குவது குறித்து விவாதிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

சாட்டை முதல் வாத்தி வரை… தமிழ் சினிமாவில் கொண்டாடப்பட வேண்டிய ஆசிரியர்கள்!

ஆசியான் கூட்டமைப்பில், இந்தோனேசியா, மலேசியா, சிங்கப்பூர், லாவோஸ், கம்போடியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, புரூனே, வியட்நாம், மியான்மர் ஆகிய நாடுகள் இடம் பெற்றுள்ளனர்.

MUST READ