Homeசெய்திகள்இந்தியாமத்திய அரசு பணிகளுக்கு தேர்வான  51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

மத்திய அரசு பணிகளுக்கு தேர்வான  51,000 பேருக்கு நியமன ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

-

மத்திய அரசின் பல்வேறு துறைகளில் புதிதாக நியமனம் செய்யப்பட்டுள்ள 51,000க்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பணி நியமன ஆணைகளை பிரதமர் மோடி இன்று காணொலி மூலம் வழங்கினார்.

மத்திய அரசில் வருவாய், உயர்கல்வி, உள்துறை அமைச்சகம் உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் புதியவர்கள் சேரும் வகையில் நாடு முழுவதும் 40 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த முகாமில் லட்சக்கணக்கானோர் பங்கேற்ற நிலையில் அவர்களில் 51 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்வு செய்யப்பட்டனர். இந்நிலையில், இன்று காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துகொண்டு அவர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி காணொலி காட்சி வாயிலாக உரையற்றினார். அப்போது அவர் பேசியதாவது:-  இந்த தீபாவளி மிகவும் சிறப்பானதாக இருக்கும் என்று நான் கூற விரும்புகிறேன். 500 ஆண்டுகளுக்குப் பிறகு பிரபு ராம்லல்லா பிரமாண்டமான அயோத்தி கோவிலை அலங்கரித்த பிறகு இது முதல் தீபாவளி என்பதால் இது சிறப்பு. இந்த புனித நாளில் 51,000 இளைஞர்களுக்கு அரசு வேலைக்கான நியமனக் கடிதங்கள்  வழங்கப்படுகின்றன.

இந்திய அரசில் லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு நிரந்தர அரசு வேலை வழங்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பாஜக மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி ஆளும் மாநிலங்களில் கூட லட்சக்கணக்கான இளைஞர்களுக்கு பணி நியமன கடிதம் வழங்கப்பட்டுள்ளது. சமீபத்தில், ஹரியானாவில் புதிய அரசு அமைந்தவுடன், 26 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைத்துள்ளது. அரசின் கொள்கைகள் மற்றும் முடிவுகள் வேலைவாய்ப்பு உருவாக்கத்தில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இன்று நாட்டின் மூலை முடுக்கெல்லாம் அதிவேக நெடுஞ்சாலைகள், நெடுஞ்சாலைகள், சாலைகள், ரயில்வே, துறைமுகங்கள், விமான நிலையங்கள், ஃபைபர் லைன்கள் அமைக்கும் பணிகளும், புதிய தொழிறசாலைகளை விரிவுபடுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.

கடந்த 10 ஆண்டுகளில், பாஜக கொள்கைகள் காதி மற்றும் கிராமோத்யோகின் முழுப் படத்தையும் மாற்றிவிட்டன. வதோதராவில் நேற்று தொடங்கப்பட்ட பாதுகாப்புத் துறைக்கான விமானம் தயாரிக்கும் தொழிற்சாலை மூலம் ஆயிரக்கணக்கானோர் நேரடி வேலைவாய்ப்பு பெறுவர். ஆனால் உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகளின் எண்ணிக்கையை விட, விமான உதிரி பாகங்களை உருவாக்க பல சிறிய தொழிற்சாலைகளின் வலையமைப்பு உருவாக்கப்படும்.

நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் பங்கு இதில் இடம்பெறும். காங்கிரஸ் அரசைக்காட்டிலும் காதி விற்பனை 400% அதிகரித்துள்ளது. கைவினைஞர்கள், நெசவாளர்கள் மற்றும் வணிகர்களுக்குப் பலனளிக்கும் வகையில் காதித்தொழில் வளர்ந்து வருகிறது என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது. இந்த வளர்ச்சி காதி தொழிலுக்கு மட்டுமின்றி சமூகத்தின் பல்வேறு பிரிவினருக்கும் நன்மை பயக்கும். இது வேலை வாய்ப்புகளை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கவும் வழிவகுக்கிறது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

மத்திய அரசின் லக்பதி திதி யோஜனா கிராமப்புற பெண்களுக்கு புதிய வேலைவாய்ப்பு மற்றும் சுய வேலை வாய்ப்புகளை வழங்கியுள்ளது. கடந்த பத்தாண்டுகளில் 10 கோடி பெண்கள் சுய உதவிக்குழுக்களில் இணைந்துள்ளனர்.  இந்தப் பெண்களில் 3 கோடி பெண்களை லக்பதி திதி செய்ய மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இதுவரை 1.25 கோடி பெண்கள் லக்பதி திதி ஆகியுள்ளனர். அதாவது அவரது ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்தை தாண்டியுள்ளது. ஸ்பேஸ் செக்டார் முதல் செமிகண்டக்டர் வரை ,எலக்ட்ரானிக்ஸ் முதல் எலக்ட்ரிக் வாகனம் வரை ஒவ்வொரு புதிய தொழில்நுட்பத்திலும் மேக் இன் இந்தியாவைமுன்னோடியாகச் செய்துள்ளோம், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ