Homeசெய்திகள்இந்தியாவயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வுசெய்த பிரதமர் மோடி... முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல்...

வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை ஹெலிகாப்டரில் ஆய்வுசெய்த பிரதமர் மோடி… முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார்

-

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்புகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டு, முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

கேரள மாநிலம் வயநாடு பகுதியில் கனமழை காரணமாக கடந்த 30-ஆம் தேதி ஏற்பட்ட நிலச்சரிவில் முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. நிலச்சரிவில் சிக்கி 427 பேர் உயிரிழந்த நிலையில், 138 பேர மாயமாகியுள்ளனர். மாயமானவர்களை தேடும் பணி இன்று 11வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கேரளாவில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பிரதமர் மோடி ஹெலிகாப்டர் மூலம் ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக, டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் கண்ணூர் விமான நிலையம் வந்த பிரதமருக்கு, கேரள ஆளுநர், முதல்வர் பினராயி விஜயன் ஆகியோர் வரவேற்றனர். தொடர்ந்து ஹெலிகாப்டர் மூலம் புறப்பட்ட அவர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, சூரல்மலை பகுதியில் பிரதமர் மோடி, , முதலமைச்சர் பினராயி விஜயன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறினார். ஆய்வுப்பணியின்போது தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

இதனை தொடர்ந்து, பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.

MUST READ