Homeசெய்திகள்இந்தியாஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த தடை

-

ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆந்திர மாநிலம் குண்டூரில் தெலுங்கு தேச கட்சி சார்பில் புத்தாண்டு மற்றும் மகர சங்கராந்தி பண்டிகையை முன்னிட்டு அரை கிலோ எண்ணெய், அரை கிலோ துவரம் பருப்பு, சேலை வழங்கும் சந்திரண்ணா சங்கராந்தி காணிக்கை
பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு மூன்று பெண்கள் இறந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னாள் முதல்வர் சந்திரபாபு பயணாளிகளுக்கு பரிசு தொகுப்பை வழங்கினார். இதற்காக 30 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் பிரம்மாண்ட பொது கூட்டமும் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூட்டத்தில் சந்திரபாபு பங்கேற்று பேசிய பின்னர் பரிசு தொகுப்பை வழங்கி சென்ற பின்னர் அதனை பெறுவதற்கு நூற்றுக்கணக்கானோர் மேடை முன்பு திரண்டதில் கூட்ட நெரிசல் ஏற்பட்டு பலர் காயமடைந்தனர்.

முன்னதாக ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் பாகங்கா – பாமுரு சாலையில் உள்ள கந்துகூரில் உள்ள என்டிஆர் சந்திப்பு அருகே தெலுங்கு தேச கட்சி தலைவரும் ஆந்திர மாநில முன்னாள் முதல்வருமான சந்திரபாபு இதி ஏமி கர்மா எனும் நிகழ்ச்சியில் வேனில் இருந்தபடி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமான தெலுங்கு தேசம் கட்சியினர் திரண்டு வந்தனர். இந்நிலையில் சந்திரபாபு இருந்த வாகனத்தில் அருகே செல்ல பலர் செல்ல முயன்றபோது கூட்ட நெரிசலில் சிக்கி 8 பேர் உயிரிழந்தனர்.

இந்நிலையில் ஆந்திராவில் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த தடை விதித்து மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.தெலுங்கு தேசம் கட்சி நடத்திய இரு கூட்டங்களில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்பு நிகழ்ந்ததால் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

MUST READ