spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்இந்தியாகொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் - விமான சேவை பாதிப்பு

கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் – விமான சேவை பாதிப்பு

-

- Advertisement -

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா பன்னாட்டு விமான நிலையத்தில் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விமான சேவை பாதித்துள்ளது.

வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக  கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக வட மாநிலங்களின் பல பகுதிகள் மழை நீர்  சூழ்ந்துள்ளது.

we-r-hiring

 

அந்த வகையில் மேற்குவங்க மாநிலத்தில் நேற்று நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெய்த கன மழை காரணமாக கொல்கத்தாவின் நகரப் பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.

கொல்கத்தாவில் உள்ள நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சர்வதேச விமான நிலையத்தில் தண்ணீர் தேங்கி உள்ளதால் பல விமானங்களின் வருகை தாமதமானதுடன் மட்டுமில்லாமல் புறப்படுவதும் தாமதமானது.

விமான நிலையத்தில் மழை வெள்ளம் சூழ்ந்த பகுதியில் நின்ற விமானங்களில் பயணிகள் ஏற முடியாமல் பாதிப்பை ஏற்படுத்தியது.

MUST READ