Homeசெய்திகள்இந்தியாராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்!

ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்!

-

- Advertisement -

 

ராஜஸ்தான் முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றார்!
Photo: ANI

ராஜஸ்தான் மாநில முதலமைச்சராக பா.ஜ.க.வைச் சேர்ந்த பஜன்லால் சர்மா பதவியேற்றுக் கொணடார்.

“வெள்ள நிவாரணத்தை ரொக்கமாக வழங்கலாம்”- உயர்நீதிமன்றம் அனுமதி!

ராஜஸ்தான் மாநிலத்தின் தலைநகர் ஜெய்ப்பூரில் இன்று (டிச.15) மதியம் 01.30 மணிக்கு நடந்த பதவியேற்பு விழாவில், மாநில முதலமைச்சராக பஜன்லால் சர்மா பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ராஜஸ்தான் மாநில ஆளுநர் கல்ராஜ் மிஸ்ரா பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். அதைத் தொடர்ந்து, ராஜஸ்தான் மாநில துணை முதலமைச்சர்களாக தியா குமாரி, பிரேம்சந்த் பைரவா ஆகியோர் பதவியேற்றுக் கொண்டனர்.

டி.என்.பி.எஸ்.சி. தேர்வு முடிவை உடனே வெளியிட அன்புமணி ராமதாஸ் எம்.பி. வலியுறுத்தல்!

பதவியேற்பு விழாவில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, மகாராஷ்டிரா மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே, பா.ஜ.க.வின் மூத்த தலைவர்கள், மத்திய அமைச்சர்கள், பா.ஜ.க. தொண்டர்கள் என 50,000- க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

MUST READ