Homeசெய்திகள்இந்தியாமாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றம்!

மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றம்!

-

- Advertisement -

 

மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றம்!
Photo: Sansad TV

டெல்லி மாநிலத்தின் அரசு அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.

we-r-hiring

கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!

டெல்லி மாநிலத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க வழிவகைச் செய்யும், டெல்லி அரசு அதிகாரிகளை நியமன மசோதா, மக்களவையில் எளிதாக நிறைவேற்றப்பட்ட நிலையில், மாநிலங்களவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, இந்த சட்ட மசோதா ஜனநாயக படுகொலை என தி.மு.க.வின் நாடாளுமன்ற உறுப்பினர் திருச்சி சிவா கூறினார்.

டெல்லியில் தேர்தலில் வெற்றி பெற முடியாத பா.ஜ.க., பின் வாசல் வழியாக அதிகாரத்தைப் பறிக்க முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் குற்றம்சாட்டினார்.

டெல்லி மதுபான உரிமை ஊழலை விசாரித்து வரும் அதிகாரிகளை ஆம் ஆத்மி அரசு பணியிட மாற்றம் செய்யப்படுவதைத் தடுப்பதற்காகவே, இந்த மசோதாக் கொண்டு வரப்பட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து நீண்ட விவாதத்திற்கு பிறகு மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. மசோதாவுக்கு ஆதரவாக 131 வாக்குகளும், எதிராக 102 வாக்குகளும் பதிவாகின. இதையடுத்து, இந்த மசோதா மாநிலங்களவையில் நிறைவேறிய நிலையில், குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

அமைச்சர் செந்தில் பாலாஜியைக் காவலில் எடுத்த அமலாக்கத்துறை!

தேசிய ஜனநாயக கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மட்டுமின்றி, பிஜு ஜனதா தளம், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆகிய கட்சிகளும் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தனர்.

MUST READ