சென்னை கலாஷேத்ராவில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த விவகாரத்தில் உதவி பேராசிரியர் ஹரிபத்மன் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன் தலைமையிலான விசாரணைக் குழு பரிந்துரைச் செய்துள்ளது.
“கருணாநிதி பெயரை முதலமைச்சர் பதவிக்கு முன்மொழிந்த எம்.ஜி.ஆர்.”- சுவாரஸ்ய தகவல்கள்!
இதனையடுத்து, முன்னாள் மாணவி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதுச் செய்யப்பட்ட ஹரிபத்மன், பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்றொருபுறம் மூன்று நடன உதவியாளர்களைப் பணி நீக்கம் செய்த கல்லூரி நிர்வாகம், இந்த பிரச்சனை குறித்து விசாரிக்க, ஓய்வுபெற்ற நீதிபதி கண்ணன், முன்னாள் டி.ஜி.பி. லத்திகா சரண், மருத்துவர் சோபா வர்தமான் ஆகியோரைக் கொண்ட குழுவை அமைத்தது.
திருத்தணியில் ஆடிக் கிருத்திகைத் தெப்பத் திருவிழா தொடங்கியது!
விரிவான விசாரணையை மேற்கொண்ட அந்த குழுவினர், 58 பக்கங்களைக் கொண்ட அறிக்கையை கலாஷேத்ரா நிர்வாகத்திடம் சமர்ப்பித்துள்ளனர். அதில், உதவிப் பேராசிரியர் ஹரிபத்மன் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்லூரி விதிகளை மாற்றியமைக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.