
தி.மு.க.வின் தலைவரும், தமிழக முதலமைச்சருமான கலைஞர் கருணாநிதியின் ஐந்தாம் ஆண்டு நினைவுத் தினம், தமிழகம் முழுவதும் தி.மு.க.வினரால் அனுசரிக்கப்பட்டது. சேலம் மார்டர்ன் தியேட்டரில் தனது திரைத்துறைப் பயணத்தைத் தொடங்கிய கருணாநிதி, நாட்டில் எந்த கட்சி ஆள வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும் அளவிற்கு மிகப்பெரிய சக்தியாக உருவானார்.
“அறுவடையை முடித்து நிலத்தை ஒப்படைக்க வேண்டும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!
கருணாநிதி குறித்த சுவாரஷ்ய தகவல் குறித்து விரிவாகப் பார்ப்போம்!
தனது 18 வயதில் எழுதத் தொடங்கிய கருணாநிதி, 20 ஆவது வயதில் பெரியாரிடம் குடியரசுப் பத்திரிகையில் பணியாற்றினார். அதே நேரம், நாடகத்திற்கான கதை எழுத்துவதிலும் ஆர்வம் கொண்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, எம்.ஆர்.ராதா கேட்டுக் கொண்டதிற்கிணங்க, ஒரே வாரத்தில் ‘தூக்குமேடை’ என்ற நாடகத்திற்கான கதையை எழுதிக் கொடுத்தார். அந்த நாடகத்தில் கதாநாயகனாக கருணாநிதியும், வில்லனாக எம்.ஆர்.ராதாவும் நடித்தனர்.
அப்போது, ஒத்திகையில் இல்லாத வசனங்களைக் கேள்வியாக எம்.ஆர்.ராதா அடுக்கடுக்காகக் கேட்க, கருணாநிதியோ சளைக்காமல் பதிலளித்தார். இதில் அவரது நடிப்பில் அசந்துபோன எம்.ஆர்.ராதா, கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை வழங்கினார்.
சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திற்கு கதை மற்றும் வசனம் எழுதுவதற்காக, டி.ஆர்.சுந்தரம் விடுத்த அழைப்பின் பேரில் கலைஞர் சேலத்திற்கு வந்தார். ‘மந்திரிகுமாரி’ என்ற திரைப்படத்திற்கு கதை, வசனம் எழுதினார். அந்த படத்தில் கதாநாயகனாக நடிக்க எம்.ஜி.ஆருக்கு வாய்ப்பு தர வேண்டும் என்று கலைஞர் கேட்டுக் கொண்டதையடுத்து, அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.
இந்தப் படத்திற்கு பிறகு என்.எஸ்.கிருஷ்ணன் இயக்கிய ‘மணமகள்’ படத்தின் சிறப்பான பணிக்காக கருணாநிதிக்கு கார் பரிசாக வாங்கிக் கொடுத்தார். இதனையடுத்து ‘மலைக்கள்ளன்’ படத்திற்கு வசனம் எழுதினார். இவ்வளவு சிறப்புக்கு பின்னரே கருணாநிதியின் பெயரை எம்.ஜி.ஆர் முதலமைச்சராக முன்மொழிந்தார்.
‘பராசக்தி’ படத்தில் சிவாஜி கணேசனை மாற்ற வேண்டும் என்று தயாரிப்பாளர் சொன்னபோது, அவரே இருக்க வேண்டும் என கருணாநிதி வலியுறுத்தினார். 1952- ஆம் ஆண்டு வெளிவந்த ‘பராசக்தி’ திரைப்படம் பிரம்மாண்ட வெற்றி பெற்றது. சமூகத்தின் கொடுமைகளை பராசக்தி படத்தின் மூலம் கடுமையான விமர்சனங்களை வசனமாக கருணாநிதி முன் வைத்திருந்தார்.
எம்.ஜி.ஆர். சிவாஜி என்கிற இருபெரும் கதாநாயகர்களை தமிழ் சமூகத்தில் கொண்டு சேர்த்த பெருமை கருணாநிதியையே சேரும். 75 திரைப்படங்களுக்கு வசனம் எழுதிய கலைஞர் மற்ற எழுத்துப் பணிகளையும் அயராமல் மேற்கொண்டார். அரசியலில் ஏற்பட்ட மனச்சோர்வை தன்னுடைய எழுத்துப் பணியால் போக்கிக் கொண்டார்.
வாளையாறு அணையில் குளித்த மாணவர்கள் 2 பேர் நீரில் மூழ்கி பலி
எப்போதும் எளிமை, கையில் பேனாவுடன் பயணித்துக் கொண்டிருந்த கருணாநிதி, தன்னை யார் சந்திக்க வந்தாலும், பேட்டி எடுக்க வந்தாலும் உடனடியாக அனுமதி தருவது அவரது வழக்கம். செய்தியாளர்கள் எழுப்பும் எந்தவொரு கேள்விகளுக்கும் முகம் சுழிக்காமல், அனைவரும் ஆழமாக சிந்திக்கும் வகையில் பதில் அளிப்பதே அவரது பாணி.